lisa del piero Instagram
Viral Corner

"செக்ஸ் பொம்மைகள் போதும், ஆண்கள் தேவையில்லை" - வெளிப்படையாக பேசிய இளம் மாடல்

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு லிசா அளித்த நேர்காணலில், "நான் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நபரைக் காதலித்தேன். அவர் என்னை ரகசியமாக ஒரு ஹோட்டலில் புகைப்படம் எடுத்தார்" எனக்கூறியுள்ளார். அத்துடன் பல நாட்கள் கழித்துத் தான் அந்த நபருக்குத் திருமணமாகியிருப்பதை கண்டுபிடித்ததாகக் கூறினார்.

Antony Ajay R

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும் மாடலுமான லிசா டெல் பிரோ தனக்கு ஆண்களை விட உடலுறவு பொம்மைகளுடன் இருப்பதே மகிழ்ச்சி என பொது வெளியில் கூறியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் லிசா. இவர் 17 வயது முதலே மாடலிங் துறையில் ஜொலிக்கத் தொடங்கியவர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 9 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர்.

தற்போது 25 வயதாகும் லிசா உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் கெட்டிக்காரர். கடந்த ஆறு ஆண்டுகளாக உடற்பயிற்சி மட்டும் விளையாட்டுகளில் முழு கவனம் செலுத்தி தனது துறையில் உயர்ந்திருக்கிறார் லிசா.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு லிசா அளித்த நேர்காணலில் "நான் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நபரைக் காதலித்தேன். அவர் என்னை ரகசியமாக ஒரு ஹோட்டலில் புகைப்படம் எடுத்தார்" எனக்கூறியுள்ளார். அத்துடன் பல நாட்கள் கழித்துத் தான் அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருப்பதை கண்டுபிடித்ததாகக் கூறினார்.

lisa

காதல் தோல்வி குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த லிசா, “நான் தனியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு யாருடனும் உறவு வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.

வாழ்க்கைத் துணை இல்லாமல் எப்படி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என ஒரு ரசிகர் கேட்க, “எப்போதும் உங்கள் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை சார்ந்திருக்காதீர்கள்” எனக் கூறிவிட்டார் லிசா.

கேள்வி பதிலைச் சுவாரஸ்யமாக்க விரும்பிய மற்றொரு ரசிகர், நீங்கள் திடீரென கர்பமாகிவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்க, “sex toyகளை வைத்து நான் கர்ப்பமானால் நிச்சயம் இன்ப அதிர்ச்சி அடைவேன்” எனக் கூறினார் லிசா.

மேலும் அவர், “முன்பெல்லாம் பெண்கள் என்னை அதிகம் கேலி செய்தனர். இப்போது நான் நல்ல விதமாக உணர்கிறேன். பெண்கள் ஏன் ஒல்லியாக இருப்பதில் இவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள்? 155 பவுண்டுக்கு அதிகமாக எடை இருந்தால் தான் என்ன?” எனத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?