Sehar Shinwari Twitter
Viral Corner

"இந்தியாவை வென்றால் இதை செய்கிறேன்" - பாகிஸ்தான் நடிகை செய்த ட்வீட், ஷாக்கான நெட்டிசன்கள்

Keerthanaa R

ஜிம்பாப்வே உடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால், ஜிம்பாப்வே நாட்டுக்காரரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார் பாகிஸ்தான் நடிகை ஒருவர்.

டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இரண்டு க்ரூப்களாக அணிகள் பிரிந்து விளையாடி வருகின்றன. க்ரூப் 2வில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்திய அணிக்கு, வரும் ஞாயிற்று கிழமை ஜிம்பாப்வே உடன் போட்டி நடக்கவுள்ளது. சூப்பர் 12ல் இதுவே இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி.

இந்த போட்டியில் வென்றால், இந்திய அணி அரை இறுதிக்குச் செல்லும். தோற்றால் அரை இறுதிக்கு செல்ல புள்ளிப்பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் இருக்கும் அணிகள் தோல்வி அடைய காத்திருக்கவேண்டிய நிலை வரும்.

இந்நிலையில், ஜிம்பாப்வே உடன் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா தோற்றால், ஜிம்பாப்வே நாட்டுக்காரரை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர். 

சேஹர் ஷின்வாரி என்ற அந்த நடிகை தனது டிவிட்டரில், "அற்புதம் ஏதாவது நடந்து, அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், நான்  ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன்" என்று செஹர்  ஷின்வாரி ட்வீட் செய்துள்ளார்.

இது இணையத்தில் பெரும் கவனம் பெற்று வருகிறது. 1400க்கும் மேல் லைக்குகள், 900த்துக்கும் மேல் ரீட்வீட்கள் இதற்கு கிடைத்துள்ளது. பலரும் நடிகையின் ட்வீட்டுக்கு நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். ஒருவர், "ஒருவேளை அவர் உங்களை மணக்க மறுத்துவிட்டால் என்ன நடக்கும்?" என்று கேட்டிருந்தார்.

ஒருவர் "இன்று முதல் நான் ஜிம்பாப்வேவை சேர்ந்தவன்"  என்றார். ஆனால், சேஹரின் பழைய ட்வீட்கள் சிலவும் நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளன.  முன்னர் ஒரு முறை இலங்கை அணி வென்றால் இலங்கையை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வதாக ட்வீட் செய்துள்ளார் சேஹர். நியூசிலாந்து வீரர் நீஷமை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ட்வீர் செய்துள்ளார். 

திருமணம் மீது இவருக்கு இருக்கும் ஆர்வம் இந்த ட்வீட்களில் தெரிவதாக இணையவாசிகள் இவரை ட்ரால் செய்து வருகின்றனர். 

இந்திய அணி பாகிஸ்தான் உடனான போட்டியிலும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் மோசடி செய்து வென்றதாக டிவிட்டரில் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?