முக்கோண சக்கரங்களைக் கொண்ட வினோத சைக்கிள் - எப்படி வேலை செய்கிறது? Twitter
Viral Corner

முக்கோண சக்கரங்களைக் கொண்ட வினோத சைக்கிள் - எப்படி வேலை செய்கிறது?

Antony Ajay R

செர்ஜி கோர்டியேவ் என்ற இஞ்சினியர் மீண்டும் ஒரு முறை இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளார். அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அப்படி வித்தியாசமாக அவர் முக்கோணமான சக்கரங்களைக் கொண்ட சைக்கிளை உருவாக்கியுள்ளார். கொஞ்சம் வளைந்த முக்கோணமாக இருக்கும் இந்த சக்கரத்தைக் கொண்டு அந்த சைக்கிளை ஓட்டவும் முடிகிறது என்பது தான் அதிசயம். 

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது சக்கரங்கள். ஏனென்றால் மனிதர்கள் கால்கடுக்க நடக்க வேண்டிய பல மைல்தூரத்தை சக்கரங்கள் சுருக்கின. 

ஆனால் இன்று சக்கரங்களே தங்கள் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. 

செர்ஜி பல வினோதமான கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர். உலகிலேயே சிறிய மிதிவண்டியைக் கூட உருவாக்கியுள்ளார். 

அந்த வரிசையில் இவர் உருவாக்கிய முக்கோண சக்கரங்களைக் கொண்ட மிதிவண்டி பலரையும் ஈர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இவர் உருவாக்கிய சதுரமான சக்கரங்களைக் கொண்ட மிதிவண்டியும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

முக்கோண சக்கரங்களைக் கொண்ட சைக்கிள் ஒரு இன்ச் கூட நகர வாய்ப்பே இல்லை என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இதை விடக் கடினமான சதுர சக்கரங்களைக் கொண்ட சைக்கிளைக் கூட உருவாக்கியிருக்கிறார். அதையும் சாலையில் ஓட வைத்திருக்கிறார். 

அவரது பல விதமான வினோத பொருட்களை அவரது the Q யூடியூப் சேனலில் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?