இன்று இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் இந்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியாவை ருமேனியா மேயர் திட்டுகிறார்.
உக்ரைனில் போர் நடைபெற்று வரும் சூழலில் அங்கிருந்து தப்பி வரும் மாணவர்களுக்கு ருமேனியா அரசு அடைக்கலம் அளித்து வருகிறது.
இந்திய அமைச்சர் மாணவர்களிடையே உரையாற்றும் போது போலியான கருத்துக்களை தெரிவித்ததால் ருமேனியா மேயர், "அவர்கள் மாணவர்கள்... அவர்கள் எப்போது வீட்டுக்குச் செல்வார்கள் என்று விளக்குங்கள். அவர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கியது நான். நான் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன்" என்று கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை நெட்டிசன்களும் காங்கிரஸ் கட்சியினரும் பரப்பி வருகின்றனர்.