Brothers Clash Twitter
Viral Corner

பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்த சகோதரர்கள்; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Priyadharshini R

லண்டனிலிருந்து புறப்பட்ட விமானம் கிரீஸ் நோக்கிப் பறந்த கொண்டிருந்தபோது சகோதரர்கள் இருவர் திடீரென சண்டை போட்டுள்ளனர். அருகிலிருந்த பயணிகள் உடனே விமான அதிகாரிகளை அழைத்துக் கூறியுள்ளனர்.

ஆல்பி மற்றும் கென்னத் என்ற சகோதரர்கள் அளவிற்கு மீறி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறி சண்டையிட்டுக் கொண்டனர். சகோதரர்களின் சண்டை காரணமாக கொர்பு விமான நிலையத்தில் ஜெட் 2 விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மேலும் சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

நடுவானில் மதுபோதையில் தகராறு செய்த சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்வதை சக பயணி எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Jet2 Flight

இதற்கு முன்பு விமானத்திற்குள் யாரோ ஒருவர் குட்கா மென்று துப்பிய கறை இருக்கும் புகைப்படத்தை சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்திருந்தார். இது போன்று விமானத்தில் அசுத்தங்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அதிகாரிகளின் வேண்டுகோளாக உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?