ஒட்டுமொத்த இணைய உலகத்தையே மன அழுத்ததில் இருந்து விடுபட வைத்திருக்கிறது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.
Times Now -யின் நெறியாளர் தவறான ஒரு நபரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வறுத்தெடுத்தார்.
உக்ரைன் தொடர்பான ஒரு debate இல், அதன் நெறியாளர் சிவ்சங்கர் உக்கிரமாக பேசிக் கொண்டு இருந்தார். அது மட்டும் அல்லாமல், அதில் கலந்து கொண்ட ஒரு நபரை திட்டிக் கொண்டு இருந்தார்.
என்ன நடந்தது?
கிவ் போஸ்ட் இதழின் ஆசிரியர் போதன் மற்றும் ரான் பால் கல்வி நிலையத்தை சேர்ந்த டேனியல் மெக் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
போதனை மெக் என நினைத்து கொண்டு, அவரை திட்ட தொடங்கினார் சிவ்சங்கர்.
அவர் போதனை நோக்கி, “மெக் உங்களுக்கு உக்ரைன் மீது கவலை இருந்தால் களத்திற்கு வாருங்கள். இந்தியாவுக்கு பாடம் எடுக்காதீர்கள். உங்கள் பாடத்தை கேட்க நான் இல்லை,” என்றார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மெக், நான் எதுவுமே பேசவில்லை என்னை ஏன் திட்டுகிறீர்கள்? என்று கம்மிய குரலில் கேட்டார்.
இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.