1 week leave in UAE - List of 60 countries where you can visit without visa! Twitter
உலகம்

ஐக்கிய அரபு நாட்டில் 1 வார லீவு! UAE லிருந்து விசா இல்லாமல் 60 நாடுகள் போகலாமா?

எமிரேட்ஸிடில் வரவிருக்கும் ஆறு நாள் நீண்ட விடுமுறையின் போது மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

Priyadharshini R

இந்தியர்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் வசித்து வருகின்றனர்.

படிப்பிற்காகவும், வேலைக்காகவும் பல நாடுகளில் இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அரபு நாடுகளில் வாழும் மக்களுக்கு ஜூன் மாதம் ஒரு வாரம் வரை விடுமுறை இருக்கிறது.

அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி விசா இல்லாமல் விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ள போகிறோம்.

ஜூன் மாத இறுதியில் வரும் ஈத் அல்-அதா (ஹஜ்) பண்டிகைக்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு வாரம் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஜூன் 27 செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை 2 ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீடிக்க வாய்ப்புள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள்தொகையில் வெளிநாட்டினர் பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 36 சதவீதம் பேர், அதாவது 3.5 மில்லியன் மக்கள் இந்தியர்கள்.

இதற்கிடையில், எமிரேட்ஸிடில் வரவிருக்கும் ஆறு நாள் நீண்ட விடுமுறையின் போது மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தாய்லாந்து, மாலத்தீவுகள், கத்தார், ஓமன், ஜோர்டான் மற்றும் இலங்கை போன்ற பிரபலமான இடங்கள் உட்பட, உலகம் முழுவதும் 60 இடங்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது.

ஈத் அல்-அதா விடுமுறையின் போது வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளின் பட்டியல் இங்கே.

மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகளை சுற்றி அமைந்துள்ள

கத்தார்

ஓமன்

ஜோர்டான்

ஈரான்

ஆசிய நாடுகள்

பூட்டான் - லாவோஸ் (laos), மாலத்தீவுகள்

கம்போடியா - இலங்கை, மக்காவ் (macau)

இந்தோனேசியா - நேபாளம்

கஜகஸ்தான் - மியான்மர்

ஐரோப்பா நாடுகள்

10 வருட கோல்டன் விசாவைக் கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் நாட்டிற்கு செல்லலாம்

உள்ளிட்ட 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?