Tour canva
உலகம்

பட்ஜெட் சுற்றுலா: நீங்கள் இந்த 10 வெளிநாட்டு தலங்களுக்கு குறைந்த செலவில் செல்லலாம்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புகையில் நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்திய ரூபாயின் மதிப்பு. இதனாலேயே நடுத்தர வர்க்கத்தினருக்கு வெளிநாட்டு சுற்றுலா என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில அழகான நாடுகளின் பட்டியல் இதோ

NewsSense Editorial Team

1. ஐஸ்லாந்து :

உலகின் அழகான நாடுகளின் ஒன்றான ஐஸ்லாந்து, உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுலா அனுபவத்தை நிச்சயமாக வழங்கும். Eyjafjallajökull எனப்படும் பனிப்பாறைகளால் சூழப்பட்ட எரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பனிக் குகைகள், கருங்கடற்கரை, தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் வைரக் கடற்கரை மற்றும் சில்லிடும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றின் அழகில் திளைக்கலாம்.


இங்கு ஒரு இந்திய ரூபாய், 1.69 ஐஸ்லாந்து க்ரோனா-விற்குச் சமம் ஆகும்.

ஐஸ்லாந்து

2. தென் கொரியா :

உலகின் அதிகப்படியான செலவு வீதத்தைக் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. தென் கொரியாவில் நான்கு தனித்தனி பருவ காலங்கள் நிலவுகிறது. ஒவ்வொன்றும் தனித்துவமான மற்றும் அழகிய இயற்கை எழிலை பரிசளிக்கின்றன. வசந்த காலத்தில், ஃபோர்ஸிதியா, செர்ரி மலரும், அஜயலா மலரும் பூத்து குலுங்குகின்றன. கோடை காலத்தில், மக்கள் கடற்கரையில் தங்கள் விடுமுறை அனுபவித்துத் திளைத்திருக்க அழகான கடற்கரைகளும் இருக்கின்றன. இலையுதிர் காலத்தில், மலைகள் மெல்லிய இலைகளின் கவர்ச்சியைப் போர்த்தியிருக்கின்றன. குளிர்காலத்தில், நிலமெங்கும் பனியால் மூடப்பட்டு உறையச் செய்யும்.

இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு, 16.55 கொரிய வோன் -களுக்குச் சமம் ஆகும்.

தென் கொரியா

3. கொலம்பியா :

நாம் இதுவரை அறிந்திராத வகையில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் கலாச்சார தொன்மம் என்பது மிக ஆழமானதாகும். அதன் வெப்பமண்டல காலநிலை, அழகான கடற்கரைகள், வெப்பமண்டல காடுகள் வாழ்நாளில் நிச்சயம் பார்த்து விட வேண்டியவை. கலையுடன் கூடிய பரபரப்பான நகரங்களுக்குப் பெயர் பெற்றது கொலம்பியா. அதன் தேசிய பூங்காக்களும், உலக பாரம்பரிய தளங்களும் நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்!


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு, 50.84 பெசோஸ்-களுக்குச் சமம் ஆகும்.

கொலம்பியா

4. பராகுவே :

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களுக்கு சற்றும் குறைச்சல் இல்லாத இயற்கை அழகுடனும், எழில்மிகு நகரங்களும், பாரம்பரிய சின்னங்களுடனும் பராகுவே திகழ்கிறது. அதன் பெருமிதம் மிகுந்த சுற்றுலாத் தளங்கள் குறித்து பெரும்பாலும் இன்னும் பதிவு செய்யப்படாமலே இருப்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் தான்.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 88.12 பராகுவே குரானி-களுக்குச் சமம் ஆகும்.

பராகுவே

5. வியட்நாம் :


”நம் வாழ்வில் கட்டாயம் பார்த்துவிட வேண்டும்” என்று வைத்திருக்கும் பட்டியலில் கட்டாயம் வியட்நாமுக்கும் ஒரு இடம் கொடுத்தாக வேண்டும். தென்சீனக் கடற்கரையில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான Hoi An நகரம், Ha Long விரிகுடாவில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள், அவற்றை அடைவதற்கான படகு சவாரி, மழைசூழ் பிரதேசமான ஷபா ஆகிவை நிச்சயமாக மிக அற்புதமான சுற்றுலா அனுபவத்தை வழங்கக் கூடிய வியட்நாமின் பொக்கிஷங்களாகும்.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 296.61 வியட்நாம் டாங்க்-களுக்குச் சமம் ஆகும்.

வியட்நாம்

6. இந்தோனேசியா :


இந்திய பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்தோனேசியா, நிச்சயமாக உங்களை ஏமாற்றாத ஒரு சுற்றுலா அனுபவத்தை வழங்கும். கொமோடா தேசிய பூங்கா, அங்கிருக்கும் இந்தோனேசியாவில் மட்டுமே வசிக்கக் கூடிய ராட்சச பல்லி, கட்டிடக் கலையால் அலங்கரிக்கும் ஜாவா தீவில் அமைந்துள்ள யோக்யகர்த்தா நகரம், உலகின் மிக அழகான தீவுக்கூட்டமாக கருதப்படும் பாலி தீவின் அழகு ஆகியவை தவற விடாமல் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 168.53 இந்தோனேசிய ரூபாய்களுக்குச் சமம் ஆகும்.

இந்தோனேசியா

7. கம்போடியா :


தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியா, உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்கும் பிரமாதமான ஒரு நாடாகும். உலகின் மிகப்பெரிய கோவிலான அங்கோர்வாட் கோவில், கி.பி 944ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோ-கெர் என்னும் புத்த மடாலயம், உலகின் மிகவும் புராதானாமான நகரங்களின் ஒன்றாக விளங்கும் ஃப்ரோ ஃபென் நகரம் ஆகியவை தவற விடக் கூடாத கம்போடியா சுற்றுலாத் தளங்களாகும்.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 52.06 கம்போடியன் ரியால்-க்குச் சமம் ஆகும்.

கம்போடியா

8. லாவோஸ் :


பர்மா (மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒரு மலைப்பகுதி நாடு தான் லாவோஸ். லாவோஸ் மலைத்தொடர்களில் பஸ்ஸில் பயணிப்பது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். குறிப்பாக பிரபலமான வென்டியன்-வாங், வைங்-லுவாங் பிரபாங் ஆகிய பாதைகளில் பயணம் செய்யும்போது, அதன், நீண்ட மற்றும் திருகலான வளைவுகள் உங்களை பிரம்மிக்க வைக்கும்.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 188.50 லாவோஸ் கிப்-களுக்குச் சமம் ஆகும்.

லாவோஸ்

9. ஸ்ரீலங்கா :


நமது அண்டை நாடான இலங்கைக்கு சென்னையிலிருந்தே பறந்து விடும் வாய்ப்பானது ஒரு சிறப்பம்சமாகும். 11-ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரமும், அதனை சுற்றியுள்ள எழில் கொஞ்சும் பூங்காக்களும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். காலே நகரில் உள்ள துறைமுகம், கோட்டைகள், புனித மேரி தேவாலயம், மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இலங்கையின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள யேல் தேசிய வனம், காடு சார் சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த இடமாகும்.


இங்கு ஒரு இந்திய ரூபாயும் மதிப்பு 4.48 ஸ்ரீலங்கன் ரூபாய்களுக்குச் சமம் ஆகும்.

ஸ்ரீலங்கா

10. நேபாள் :


இந்தியா – சீனா இடையே உள்ள நேபாளத்திற்கு பயணம் செய்வது ஒரு தனித்துவமான, சாகச அனுபவமாக இருக்கும். விமானம் வழியாக செல்வதற்குப் பதிலாக, சாலைப் பயணத்தை மேற்கொள்வது சிறந்த தேர்வாகும். தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களிலிருந்து பைரவாவுக்கு அருகிலுள்ள சுனௌலி க்ராஸிங் பார்டர், பாட்னா வழியாக ரக்சௌல் பார்டர், காங்டாக் வழியாக பானிடாங்கி மற்றும் தில்லி-உத்தரகாண்ட வழியாக பன்பாசா போன்ற பாதைகளின் வழியாக நீங்கள் நேபாளத்திற்குள் செல்லலாம். நேபாளத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல தினசரி நேரடி இரவு நேர பேருந்துகள் உள்ளன.


இங்கு ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 1.60 நேபாள ரூபாய்க்குச் சமம் ஆகும்.

நேபாள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?