37,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும் எரிகல்  NewsSense
உலகம்

37,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும் எரிகல் - நமக்கு ஆபத்தா? திக் திக் நிமிடங்கள்

நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (என்.இ.ஓ) என்றழைக்கபப்டும் அமைப்பு இந்த எரிகல் சுமார் 1,150 அடி முதல் 2,560 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

NewsSense Editorial Team

மனிதர்கள் அறிவியலை கையில் எடுத்து பல்வேறு கோடிட்ட இடங்களை நிரப்பத் தொடங்கிய பிறகும், தங்கள் கணிப்புக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டு அமைதியாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது விண்வெளிதான்.

இன்னும் மனிதன் விண்வெளியை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தொடங்க கூட இல்லை என பல விஞ்ஞானிகளே கூறியுள்ளனர். அப்படி ஒரு விண்வெளி அதிசயம், வரும் மே 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

வானத்திலிருந்து ஒரு விண்கல், மணிக்கு சுமார் 37,400 கிலோமீட்டர் வேகத்தில் நம் பூமிக்கு மிக அருகில் வரவிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த எரிகல், அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான எம்பயர் கட்டடத்தின் அளவுக்கு பெரிதாக இருக்கும் என்றும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

388945 (2008 TZ3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிகல் தொடர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. இந்த எரிகல் வரும் மே 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது.

நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (என்.இ.ஓ) என்றழைக்கபப்டும் அமைப்பு இந்த எரிகல் சுமார் 1,150 அடி முதல் 2,560 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த எரிகல், பூமியில் இருந்து சுமார் 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் புவியைக் கடக்கும் என்றும், இதனால் பூமியில் உள்ள மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. என்ன தான் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், இந்த எரிகல்லை நாசா தொடர்ந்து கண்கானித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு இதே எரிகல் பூமியில் இருந்து 1.7 மில்லியன் மைல் தொலைவில் கடந்தது குறிப்பிடத்தக்கது.

பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ, அப்படி எரிகற்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. அப்படி வட்டமடித்து வரும் எரிகற்களில் 388945 (2008 TZ3) எரிகல்லும் ஒன்று.

இந்த எரிகல் வரும் 2024ஆம் ஆண்டு மீண்டும் பூமிக்கு மிக அருகில் வரும். ஆனால் சுமார் 6.9 மில்லியன் மைல் தொலைவிலேயே புவியைக் கடந்து விடும்.

மீண்டும் இந்த எரிகல், இப்போது வருவது போல பூமிக்கு மிக நெருக்கமாக வர வேண்டுமானால், மனிதர்கள் குறைந்தபட்சம் 2163ஆம் ஆண்டு வரையாவது காத்திருக்க வேண்டும் என அறிவியல் சமூகம் கூறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?