Air Force twitter
உலகம்

பறக்கும் விமானத்தில் மோதிகொண்ட பைலட்கள் - நடந்தது என்ன?

Keerthanaa R

பறக்கும் பிளேனில் விமானிகள் இருவர் சண்டைபோட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானப் பயணங்கள் குறித்து நமக்கு எத்தனை உற்சாகமும், எதிர்பார்ப்பும் இருந்தாலும், அதை சுற்றி ஆபத்துகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், இங்கு நடந்தது, பயணிகள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம்.

ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்தின் விமானிகள் இருவர் பறக்கும் விமானத்தில் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஜெனிவாவிலிருந்து பாரிஸுக்கு ஏர் ஃபிரான்ஸின், ஏர் பஸ் ஏ320 விமானம் ஒன்று புறப்பட்டது. சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திற்குள் விமானத்தை இயக்கிய இரு விமானிகளுக்கு இடையில் வாக்குவாதம் மூண்டுள்ளது.

காக்பிட்டுக்குள் வாக்குவாதம் பெரிதாகி இருவருக்குள் கைகலப்பாக மாற, விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக செயல்பட்ட விமானக் குழு, சண்டையை நிறுத்தினர். மேலும், விமானம் பாரிஸுக்கு சென்றடையும் வரை விமானக் குழுவிலிருந்து ஒருவர், காக்பிட்டிலேயே அமர்ந்து மீண்டும் இருவரும் சண்டையிடாதபடி பார்த்துக்கொண்டுள்ளனர்

விமானத்தின் செயல்பாட்டுக்கோ, அல்லது பாதுக்காப்பிற்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு, அமைதியான சூழல் உருவானது. இரு விமானிகளுக்கும் எதனால் பிரச்னை ஏற்பட்டது என்ற காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இருவரில் ஒருவர், மற்றொருவரை அறைந்ததனால் தான் கைகலப்பாக மாறியதாக கூறினார்.

பறக்கும் விமானத்தில், பயணிகளின் பாதுகாப்பு குறித்து சற்றும் கவலைப்படாமல், மோதிக் கொண்டதால், இருவரையும் அந்த நிறுவனம் இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?