மாயன் நாகரீகம்: மழைக்காடுகளுக்கு கீழே புதைந்திருக்கும் 2000 ஆண்டுகள் பழமையான நகரம்- எங்கே? Twitter
உலகம்

மாயன் நாகரீகம்: மழைக்காடுகளுக்கு கீழே புதைந்திருக்கும் 2000 ஆண்டுகள் பழமையான நகரம்- எங்கே?

Antony Ajay R

உலகின் பழமையான கலாச்சாரங்களில் ஒன்று மாயன் கலாச்சாரம். இதன் தடங்களை 2000 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் மழைக்காடுகளை ஆராய்ந்த போது இதனைக் கண்டறிந்துள்ளனர்.

குவாத்தமாலா மக்கள் தொகையில் 50% பேர் மாயன் தொல்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 20 உட்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றனர். வேறெந்த பழங்குடி மக்களும் இவ்வளவு பெரிய தொகையில் வழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய மாயன் நாகரீகம் என்பது இன்றய மெக்சிகோவின் பெரும்பகுதி, குவாதமாலா மற்றும் பெலிஸ் நாடுகள் முழுவதும் பரவி இருந்தது.

குவாத்தமாலாவின் மெக்சிகோவை ஒட்டியப் பகுதிகளில் கிட்டத்தட்ட 1680 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாயன் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதி மிராடோர்-கலக்முல் கார்ஸ்ட் பேசின் என அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த நகரில் 1000 குடியிருப்புகள் சுமார் 177 கிலோ மீட்டர் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இங்கு சில கட்டடங்கள் மற்றும் பிரமீடுகளின் எச்சங்களையும் கண்டறிந்துள்ளனர்.

LiDAR என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு பிரான்ஸ் மற்றும் குவாத்தமாலாவில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த நகரைக் கண்டறிந்துள்ளனர்.

இவர்கள் லேசர்களைப் பயன்படுத்தி மழைக்காடுகளுக்கு கீழே இருப்பவற்றைக் கண்டறிகின்றனர்.

இந்த நகரில் இருக்கும் பெரிய பாதைகளையும் பிரமீடுகளையும் வைத்து வேலை, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு மையமாக இந்த நகரம் இருந்திருக்கும் எனக் கூறுகின்றனர்.

மேலும் இந்த நகரின் நீர் மேலாண்மை வியப்பளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் தண்ணீரை எடுத்துச் செல்ல கால்வாய்களை கட்டியுள்ளனர். அதனை கோடைக்காலத்தில் பயன்படுத்த நீர் தேக்கங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

உலகிலேயே அதிகமாக ஆராயப்பட்ட பண்டைய நாகரீங்களில் ஒன்று மாயன் நாகரீகம். அதிசயம் நிறைந்த இவர்களின் கலாச்சாரத்தில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் உள்ளன. அவற்றுக்கு விடைத் தேடுவதன் தொடக்கமாக இந்த ஆய்வுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?