தாய்லாந்து: பாங்காக்கில் 4 தவிர்க்க முடியாத கலாச்சார இடங்கள்! canva
உலகம்

தாய்லாந்து: பாங்காக்கில் 4 தவிர்க்க முடியாத கலாச்சார இடங்கள்!

Priyadharshini R

உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. தலைகீழ் நீர்வீழ்ச்சி, கலர் கலர் நீர்வீழ்ச்சி என பல அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

அந்த வகையில் தாய்லாந்தின் பாங்காக்கில் தவிர்க்க முடியாத கலாச்சார இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கிராண்ட் பேலஸ்

கிராண்ட் பேலஸை ஆராயாமல் பாங்காக்கிற்கான உங்களது பயணம் முழுமையடையாது. 1782 இல் கட்டப்பட்ட இந்த கிராண்ட் பேலஸ் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து மன்னர்களின் வசிப்பிடமாக இருந்தது. இந்த கம்பீரமான வளாகத்தை அதன் கட்டிடக்கலை மற்றும் திகைப்பூட்டும் தங்கக் கோபுரங்கள் அலங்கரிக்கின்றன.

வாட் ஃபோ (சாய்ந்திருக்கும் புத்தரின் கோயில்)

சாய்ந்திருக்கும் புத்தரின் கோயில் என்றும் அழைக்கப்படும் வாட் ஃபோவிற்கு செல்லலாம், பரபரப்பான நகர சூழலுக்கு மத்தியில் ஒரு அமைதியான சோலையில் மூழ்குவீர்கள். இந்த விரிந்த கோயில் வளாகம், 46 மீ நீளம் தங்க இலைகளால் மூடப்பட்ட பிரம்மாண்டமான சாய்ந்த புத்தர் சிலைக்கு புகழ்பெற்றது.

ஜிம் தாம்சன் ஹவுஸ்

பாங்காக்கின் மையப்பகுதியில் பசுமையான வெப்பமண்டல தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கலாச்சார ரத்தினமான ஜிம் தாம்சன் ஹவுஸ் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

தாய்லாந்தின் பட்டுத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதில் புகழ்பெற்ற அமெரிக்க தொழில்முனைவோரான ஜிம் தாம்சனின் இந்த முன்னாள் குடியிருப்பு, தாய்லாந்து பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் கலைப்பொருட்களின் குறிப்பிடத்தக்க தொகுப்பைக் காட்டுகிறது.

பாங்காக் தேசிய அருங்காட்சியகம்

தாய்லாந்தின் பாங்காக் தேசிய அருங்காட்சியகம் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ள நியோகிளாசிக்கல் கட்டிடங்களின் வரிசையில் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் தாய்லாந்து வரலாறு மற்றும் நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால தொல்பொருட்களின் விரிவான தொகுப்பைக் கொண்டுள்ளது. பண்டைய சிற்பங்கள், அரச மரபுகள், மட்பாண்டங்கள் மற்றும் மத கலைப்பொருட்கள் என அங்கு இருக்கும் ஒவ்வொரு விஷயமும் தாய்லாந்தின் அடையாளத்தை காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?