தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த டெக்னாஜியை பயன்படுத்தி உலகில் உள்ள அனைத்து இடங்களையும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்க முடியும்.
கூகுள் மேப் போன்றை டெக்கை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். எந்த ஊருக்கு எப்படி செல்வது, எவ்வளவு தூரம் என்பதெல்லாம் நமக்கு கூகுள் மேப் காட்டிவிடுகிறது. ஆனால் கூகுள் மேப்பிலும் காட்டாத சில ரகசிய இடங்கள் உள்ளன.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இந்த இடங்களை கூகுள் மேப்பில் தெளிவாக பார்க்க முடியாது. அது எந்தெந்த இடங்கள் என்பதை பார்ப்போம்.
உலகின் ஒன்பதாவது பெரிய அணுமின் நிலையமான Cattenom அணுமின் நிலையம், பிரான்ஸ் Luxembourg நகருக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த இடத்தை கூகுள் மேப்ஸில் தேட முயற்சித்தால், அந்த இடத்தை பார்க்க முடியாத வகையில் பிக்சலேட் செய்யப்பட்டிருக்கும்.
கிரீஸின் கோஸ் தீவில் அமைந்துள்ள காஸ் சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இதுவும் கூகுள் மேப்ஸில் பார்க்கும்போது, அரிதாகவே தெரியும். கோடைக் காலங்களில், தீவு ஒரு பரபரப்பான திருவிழாப் பகுதியாக மாறும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் உள்ள மினாமி டோரிஷிமா தீவில் அமைந்துள்ள இந்த ஓடுபாதை விமான நிலையம் கூகுள் மேப்ஸில் மங்கலாக தெரியும்.
பிரான்சில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் தேட முயற்சித்தால், இந்த தீவின் பாதி தெளிவாகவும், மற்ற பாதி மங்கலாகவும் இருப்பதைக் காணலாம். அறிக்கைகளின்படி, 1966 மற்றும் 1996 க்கு இடையில் முருரோவா மீது பிரெஞ்சு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.
அலாஸ்காவில் இருக்கும் அம்சித்கா தீவை பாதிக்குமேல் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது.
1950 களின் பிற்பகுதியில் நிலத்தடி அணு சோதனைக்காக அமெரிக்க அணுச்சக்தி ஆணையத்தால் அம்சித்கா தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு மூன்று முறை நிலத்தடி அணு சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust