இதுவும் பூமி தான்...! வேற்று கிரகம் போல தோற்றமளிக்கும் 5 இடங்கள் - வியப்பூட்டும் படங்கள்  Newssense
உலகம்

இதுவும் நம் பூமி தான் : ’நம்புங்க மக்கா’ வேற்று கிரகம் போல தோற்றமளிக்கும் 5 இடங்கள்

வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்பது சில ஆண்டுகளாக மனித குலத்தின் தீராத கனவாக இருக்கிறது. ஆனால் பில்லியன் டாலர்கள் செலவில்லாமல், பறக்கு தட்டுகள் இல்லாமல் இந்த பூமியில் இருக்கும் சில பகுதிகள் உங்களுக்கு நிச்சயமாக பிரபஞ்சத்தின் இன்னொரு கிரகத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தைக் கொடுக்கும்.

Antony Ajay R

இயற்கை நமக்கு காண்பிக்க பல விதமான அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது.

அவை அனைத்தையும் தேடிப்பார்த்து ரசித்து வியந்து மகிழ்வது தானே வாழ்தலின் உச்சமாக இருக்க முடியும்?

இந்த அதிசய இடங்களைப் பார்க்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேரக் குழந்தைகளுக்கு சேர்த்து வைப்பதற்கு பதில் நம் வாழ்வை முழுமையாக வாழ்ந்து அனுபவங்களை கடத்த வேண்டும் என நினைப்பது மட்டும் தான்.

கிராண்ட் பிரிஸ்மடிக் ஸ்பிரிங்க்

GRAND PRISMATIC SPRING, YELLOWSTONE NATIONAL PARK

கிராண்ட் பிரிஸ்மடிக் ஸ்பிரிங்க் அமெரிக்காவின் மஞ்சள் தேசிய பூங்காவில் இருக்கிறது.

இந்த துளைகளின் விட்டம் 60 முதல் 90 மீட்டர் இருக்கும் எனவும் இதன் ஆழம் 36 மீட்டர் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

வெப்பமான பகுதிகளில் வாழும் தெர்மாபில் என்ற நுண்ணுயிரிகள் இங்கு செழித்து வாழ்கின்றன. இவை நிறமற்றதாகவோ அல்லது மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலோ இருக்கும்.

இந்த துளையின் வெளிப்புறத்தில் அதிக சூடாக இல்லாத இடத்தில் தெர்மாபில் வாழ்வது தான் இந்த மஞ்சள் நிறத்துக்கு காரணம்.

இந்த இடம் புகைப்படகாரர்கள் விரும்பும் ஒன்றாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை தானே!

வாடி ரம் பாலைவனம்

WADI RUM, JORDAN

வாடி ரம் என்பது 717 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாலைவனம்.

இங்கு இருக்கும் ஆழமான மணல் பள்ளத்தாக்குகள், சிவப்பு சுரங்கப்பாதைகள் மற்றும் மனதை மயக்கும் பாறை வடிவங்கள் உங்களை செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று உணரவைக்கும்.

வைட்டமோ ஒளிரும் புழுக்களின் குகை

WAITAMO GLOWWORM CAVES

வைட்டமோ ஒளிரும் புழுக்களின் குகை. இரவில் இந்த குகைக்குள் பார்த்தால் நட்சத்திரங்கள் நிறைந்த வானுக்கு அடியில் இருப்பது போலத் தோன்றும்.

இந்த குகைக்கும் படகிலோ அல்லது கால்நடையாகவோ செல்லலாம்.

அறிவியல் புனைவுப் படத்தில் மட்டுமே நாம் இது மாதிரியான காட்சிகளைப் பார்க்க முடியும்.

இந்த புழுக்கள் பயோலூமினென்ஸ் என்ற வேதியல் செயலின் மூலம் ஒளியை உமிழ்கிறது.

ஹில்லியேர் ஏரி

LAKE HILLIER, AUSTRALIA

ஹில்லியேர் ஏரி ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது.

இது நிச்சயமாக வேற்றுகிரகத்தில் இருப்பதாகவே நமக்கு உணர்த்தும். இந்த ஏரியின் நிறத்துக்கும் அருகில் இருக்கும் இந்தியப் பெருங்கடலின் நிறத்துக்கும் அப்பட்டமான வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

இந்த ஏரியின் நிறத்துக்கு இதில் வாழும் நுண்ணுயிரிகள் தான் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஏரி 600 மீட்டர் நீளமானது மற்றும் 250 மீட்டர் அகலமானது.

தனாகில் டிப்ரஷன், எத்தியொப்பியா

DANAKIL DEPRESSION, ETHIYOPIA

தனாகில் டிப்ரஷன் எத்தியொப்பியாவில் உள்ள எரிமலையாகும். இது நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் இருக்கும் போது நாம் அப்படியே வெள்ளி கோளில் இருப்பது போலவே இருக்குமாம்.

இந்த பகுதியில் குளங்கள் குளங்களாக சல்பியூரில் அமிலம் இருக்கிறது காற்று முழுவதும் குளோரின் நிரம்பியிருக்கிறது.

இந்த இடத்தில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாம். இதனால் உலகின் வெப்பமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது தனாகில் டிப்ரஷன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?