உலகம் முழுவதும் உள்ள கோட்டைகள் உயர்ந்த கோபுரங்களுடன் காட்சியளித்து, நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த அழகான அரண்மனைக்கு நீங்கள் சென்று வாருங்கள்.
இங்கு இருக்கும் கட்டிடக்கலை அற்புதங்கள் அந்த காலத்தின் கைவினைத்திறனை நமக்கு எடுத்துரைக்கின்றன. அப்படி தனித்துவமான வசீகரிக்கும் அழகை கொண்ட அரண்மனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
பவேரியன் ஆல்ப்ஸில் அமைந்துள்ளது நியூஷ்வான்ஸ்டீன் கோட்டை. பவேரியாவின் லுட்விக் II ஆல் உருவாக்கப்பட்ட இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோட்டை அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. அதன் அழகிய கோபுரங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உட்புறங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கும். இது டிஸ்னியின் ஸ்லீப்பிங் பியூட்டி கோட்டைக்கு உத்வேகமாக உள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஹிமேஜி கோட்டை ஜப்பானிய கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும். அதன் அழகிய தோற்றம் காரணமாக 'ஒயிட் ஹெரான் கோட்டை' என்று குறிப்பிடப்படுகிறது.
ஹிமேஜி கோட்டையானது தற்காப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஜப்பானின் கடந்த காலத்தின் அடையாளமாக அமைகிறது.
சிண்ட்ரா மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது இந்த பெனா அரண்மனை. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த காதல் கோட்டையானது பசுமையான தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள எடின்பர்க் கோட்டை 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்று கோட்டையாகும். இது பல நூற்றாண்டுகளின் ஸ்காட்டிஷ் வரலாற்றைக் கண்டுள்ளது.
ஹாரி பாட்டர் தொடரின் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த அல்ன்விக் கோட்டை நார்தம்பர்லேண்டில் அமைந்துள்ள ஒரு ரத்தினமாகும்.
இந்த அரண்மனை, அதன் அழகிய நிலப்பரப்பு தோட்டங்களுடன், ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு பின்னணியாக இருந்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust