the biblioburro Twitter
உலகம்

டாங்கி லைப்ரரி முதல் புத்தக படகு வரை : உலகெங்கிலும் உள்ள 7 வித்தியாசமான நூலகங்கள்

ஆல்ஃபா மற்றும் பீட்டோ என்ற இரண்டு கழுதைகளைப் பயன்படுத்தி நிறைய புத்தகங்களை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்கிறார். அங்கு உள்ள குழந்தைகள் புன்னகையுடன் அதனை பார்க்கின்றனர்.

Priyadharshini R

பொதுவாக நூலகங்கள் ஒரு அமைதியான, நல்ல வெளிச்சம் உள்ள சுத்தமான சுற்றுப்புறம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் நம் கற்பனைக்கும் எட்டாத வித்தியாசமான ஐடியாவுடன் பல நூலகங்கள் இயங்கி வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான லைப்ரரி குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

1. Arma de Instruccion Masiva – South America

ரவுல் லெமசோஃப் என்பவர் 1979 ஆம் ஆண்டு ஃபால்கன் கார் ஒன்றை எடுத்து, தொட்டி வடிவில் புத்தகங்களை வைக்கும் இடமாக வடிவமைக்கப்பட்டு அதனை மொபைல் நூலகமாக மாற்றியுள்ளார்.

இந்த லைப்ரரி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று மக்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறது.

2. Stuttgart City Library – Stuttgart, Germany

பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றம் கொண்ட ஸ்டட்கார்ட் நகர நூலகம், கொரிய கட்டிடக் கலைஞர் யூன் யங் யீ என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இது 2011 இல் திறக்கப்பட்டபோது, ​​நூலக ஆர்வலர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பெட்டி வடிவ சிறை என்றும் இந்த நூலகத்தை கேலி செய்து வந்தனர். அதன் வித்தியாசமான அமைப்புக்காக புகழ் பெற்றது.

3. The Biblioburro: Delivering Books Via Donkey – Columbia

கொலம்பியாவில் உள்ள ஒரு மொபைல் நூலகம் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

பிப்லியோபுரோ என பெயர் கொண்ட அந்த மொபைல் நூலகத்தை லூயிஸ் சொரியானோ, என்ற பள்ளி ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் இயக்குகிறார்.

ஆல்ஃபா மற்றும் பீட்டோ என்ற இரண்டு கழுதைகளைப் பயன்படுத்தி நிறைய புத்தகங்களை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்கிறார்.

அங்கு உள்ள குழந்தைகள் புன்னகையுடன் அதனை பார்க்கின்றனர்.

4.Trinity College Long Room – Dublin, Ireland

அயர்லாந்தின் பழமையான பல்கலைக்கழகமான டிரினிட்டி மிகப்பெரிய நூலகத்தையும் கொண்டுள்ளது.

பழமையான மற்றும் அரிதான புத்தகங்கள் நீண்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. 200,000 க்கும் மேற்பட்ட தொகுதிகள் கொண்ட இது உலகின் மிகப்பெரிய ஒற்றை அறை நூலகமாகும்.

5. The Kenyan Camel Library: Serving Nomadic Populations – Kenya

கழுதைகள் மட்டும் இந்த மொபைல் நூலகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, ஒட்டகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கென்யாவில் புத்தகங்கள் மற்றும் சில முகாம் கருவிகளை ஒட்டகங்கள் எடுத்துச் செல்கின்றன.

தேசிய நூலக சேவை 1985 ஆம் ஆண்டில் திட்டத்தை நிறுத்திவிட்டு, கென்யா பாலைவனங்களுக்கு புத்தகம் ஏந்திய ஹம்ப்-பேக்ட் சேவையை வழங்க விலங்குகளை தொடர்ந்து அனுப்பியது.

6. Epos Book Boat: Floating Books In The Fjords

Epos எனப்படும் புத்தகப் படகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 250 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளுக்கு பயணிக்கிறது.

கோடை காலத்தில், அந்த படகு பயண படகுகளாக மாறும். 1959 இல் தொடங்கிய இந்த சேவைக்கு மூன்று மாவட்டங்களின் நூலகங்களால் நிதியளிக்கப்படுகிறது.

7. Taipei Public Library – Beitou, Taiwan

இது சுற்றுச்சூழல் உணர்வுடன் கட்டப்பட்ட தைவானின் புகழ்பெற்ற நூலகமாகும்.

அதன் கட்டுமானத்திற்காக புகழ் பெற்றது. பகல் நேரத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தன்னைத்தானே காத்துக்கொள்வதற்கு, அதன் கூரையில் 20 சென்டிமீட்டர் அடுக்கு மண் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் சுவாரஸ்யமான புத்தகங்கள் உள்ளன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?