Twin Tower 9/11 attack  Newssense
உலகம்

9/11 தாக்குதல்: பல்லாயிரம் கோடி மதிப்பு தங்கம், 1000 கார் மண்ணில் புதைந்து கிடக்கிறதா?

சரி கட்டுமானங்களை பத்திரமாக அப்புறப்படுத்தியது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வந்தவைகள் எல்லாம் பெரிய நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஒன்றிய அரசின் முகமைகள் எனும் போது அவர்களுடைய சொத்து பத்துக்கள் ஏதுவும் இதில் இருந்திருக்காதா?

Gautham

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தாக்குதல், தீவிரவாத நடவடிக்கை, முதலாளித்துவக் கொள்கை மீதான தாக்குதல் என யார் எப்படி வேண்டுமானாலும் இரட்டை கோபுரத் தாக்குதலைக் கூறலாம். 

2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையம் (இரட்டை கோபுரம்) இரு விமானங்கள் மோதி தரைமட்டமானது. 

இதை ஒட்டி, அமெரிக்காவிந் பல பகுதிகளில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு அல்கொய்தா என்கிற தீவிரவாத அமைப்பும், ஒசாமா பின்லேடனும் பொறுப்பாக்கப்பட்டார்.

தாக்குதல் எல்லாம் நடந்து முடிந்த பின், ஒரு சுவர் மட்டும் இப்போது விழுமா, அப்போது விழுமா என தங்கள் உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த தீயணைப்புத் துறை வீரர்கள், ராணுவ வீரர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அப்போது தான் 33 வயதான டி ஹெச் கிரிஃபின் ஜீனியர் களத்தில் குதித்தார். இவர் டேவிட் கிரிஃபினின் (David H. Griffin) மகன். இவர் பேரிடரால் பாதிக்கப்பட்ட கட்டுமானங்களை முழுமையாக, கட்டுப்பாடோடு அழிக்கும்  கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். 

தந்தையோடு பயணித்து தொழில் நுணுக்கத்தைப் படித்த மகன், சம்பவ இடத்துக்கு 500 டன் கிரேனைக் கொண்டு வந்து 250 அடிக்கு மேல், கட்டுமானத் தொழிலாளர்ளை அனுப்பி யாருக்கும் எந்தவித சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக மிச்சமிருந்த சுவரை இடித்துத் தரைமட்டமாக்கினார். அன்றைய தேதியில் இதை சி என் என் ஊடகம் லைவில் காட்டியது நினைவுகூரத்தக்கது.

சுவரை அப்புறப்படுத்திய டி ஹெச் கிரிஃபினுக்கே, ஒட்டுமொத்த உலக வர்த்தக மையத்தின் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த, அமெரிக்க அரசு கோரியது. பெரிய லாபம் இல்லை என்றாலும் கம்பெனிக்கு அப்பணி மூலம் நல்ல பெயர் கிடைத்தது.

சரி கட்டுமானங்களை பத்திரமாக அப்புறப்படுத்தியது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வந்தவைகள் எல்லாம் பெரிய நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஒன்றிய அரசின் முகமைகள் எனும் போது அவர்களுடைய சொத்து பத்துக்கள் ஏதுவும் இதில் இருந்திருக்காதா?

இருந்தது. சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்கள், உலக வர்த்தக அமைப்பின் சிதைக்கப்பட்ட கட்டடங்களின் அடிப்பகுதியில் ரகசிய அறைகளில் இருந்தது என நியூஸ் 2 ஊடகத்திடம் கூறியுள்ளார் டி ஹெச் கிரிஃபின். அது போக, பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த கிலோ கணக்கிலான போதைப் பொருட்களும் கிடைத்ததாகக் கூறுகிறார்.

எனவே, தரைமட்டமான கட்டடங்களைச் சுத்தம் செய்யும் போது, கிட்டத்தட்ட 30 அரசுத் துறைகளோடு அனுதினமும் இணைந்து செயல்பட வேண்டி இருந்தது என்றும் கூறியுள்ளார் டி ஹெச் கிரிஃபின். 

இதெல்லாம் போக, உயிரிழிந்தவர்கள் அல்லது அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் பயன்படுத்திய கைக் கடிகாரம், மோதிரம், பணப் பை (வாலட் & பர்ஸ்) போன்றவைகளை அவர்களுடைய குடும்பத்தாரிடமோ அல்லது அவர்களிடமோ ஒப்படைக்க தனியாக எடுத்த வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின.

தங்கம் வெள்ளி கதைக்கு வருவோம்.

கட்டடம் தரைமட்டமான போது டன் கணக்கில் தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் பேஸ்மெண்டில் நான்காவது தளத்தில் ரகசிய அறையிலேயே இருந்தது  என வயர்ட், சி என் என் உட்பட பல சர்வதேச ஊடகங்களில் 2001ஆம் ஆண்டு காலத்திலேயே செய்திகள் வெளியாயின. சி என் என் ஊடகத்தின் கட்டுரை ஒன்றில் 11.8 டன் தங்கமும், 935 டன் வெள்ளியும் இருந்ததாக குறிப்பிட்டது.

ஆனால் அடுத்த சில மாதங்களுக்குள், கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடமே பத்திரமாக திரும்பக் கொடுக்கப்பட்டது என்றும் அதே தளங்களில் செய்திகள் வெளியாயின.

ஒட்டுமொத்தமாக அக்கட்டடங்களில் எவ்வளவு தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் இருந்தன, அவை அனைத்தும் கிடைத்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கிடைத்தவரையிலான விலை உயர்ந்த உலோகங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து வருகிறோம் என நியூயார்க் நகரத்தின் அப்போதைய மேயர் ருடால்ப் டபிள்யூ கிலியானி 'எல் ஏ டைம்ஸ்' பத்திரிகையிடம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் உள்துறைப் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமையான எஃப் பி ஐ உட்பட பல அமைப்புகளின் பாதுகாப்போடு, தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுடைய பாதுகாப்பான தளங்களுக்கு இடம் மாற்றப்பட்டன. 

இப்படி சம்பவ இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய டி ஹெச் கிரிஃபின் 9 மாதங்களும், அவருடைய அணி 19 மாதங்களும் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்தனர்.


(தொடரும்)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?