உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனிய பெண்கள் மீது ரஷ்ய வீரர்கள் நடத்திவரும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத உலக நாடுகள், ரஷ்யாவை எச்சரித்து வருகின்றனர். போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது
அதேநேரம் உக்ரைனும் முடிந்த அளவுக்கு ரஷ்யாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. இந்நிலையில், போரை நிறுத்த கோரி 3 வயது சிறுவன் பாடியுள்ள பாடல் லட்சக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் லியோனார்ட் புஷ் என்ற 3 வயது சிறுவன், ஒகியான் எல்ஜி என்ற இசை குழுவுடன் சேர்ந்து ரஷ்யா - உக்ரைன் போருக்கு எதிராக பாடல் ஒன்றை பாடியுள்ளான். சிறுவன் பாடிய பாடல் கீவ் நகர மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனை கண்ட பொதுமக்கள் அங்கேயே உறைந்து போகி சிறுவனின் பாடலுக்கு செவிசாய்த்தனர். தனது பாடலால் லட்சக்கணக்கானோரின் மனங்களில் சிறுவன் லியோ இடம் பிடித்து உள்ளான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com