கத்தார் ஏர்வேய்ஸ் தலைமை நிர்வாகி மற்றும் வாசுதேவ் Twitter
உலகம்

Bycott எழுத்துப் பிழையுடன் ட்ரெண்டான ஹேஷ்டேக் - கலாய்த்த கத்தார் ஏர்வேஸ் CEO

கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கரின் ஸ்பூஃப் வீடியோ, இந்தியாவில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

NewsSense Editorial Team

பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களான நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதற்கு, கத்தார் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், பல அரபு நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தன. இந்தியத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற பரப்புரையும் செய்யப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘வாசுதேவ்’ என்ற பெயரில் வட இந்திய ட்விட்டர் பயனர் ஒருவர் #BycottQatarAirways என்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், “நான் கத்தார் ஏர்வேய்ஸ்க்கு எதிராக நிற்கிறேன். கத்தார் ஏர்வேய்ஸ் இந்தியப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் பழி தீர்க்க நாம் கத்தார் ஏர்வேய்ஸை புறக்கணிப்போம்” என்று தெரிவித்திருந்தார் வாசுதேவ்.

அந்த வீடியோவிற்குப் பிறகு, 'BycottQatarAirways' என்ற தவறான எழுத்துப்பிழையுடன் கூடிய ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கத்தார் ஏர்வேய்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி வாசுதேவ் தனது புறக்கணிப்பு அழைப்பை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தும் ஒரு ஸ்பூஃப் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அல் ஜசீராவிற்கு நேரலையில் பேட்டியளித்த கத்தார் ஏர்வெய்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியின் கற்பனை எதிர்வினையாக அந்த வீடியோ அமைந்திருந்தது.

“வரப்போகிற நாட்கள் எங்களுக்கு இருண்டதாக இருக்கப் போகிறது. எங்களுடைய பங்குதாரர் வாசுதேவ், தன்னுடைய தலைமையகமான வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எங்கள் நிறுவனத்தைப் புறக்கணிக்க முடிவு செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ந்து போய் நான் எல்லா சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டு, எங்கள் அலுவலகத்துக்கு விரைந்திருக்கிறேன்” என்று அந்த ஸ்பூஃப் வீடியோவில் நகையாடியிருக்கிறார்.

மேலும், “வாசுதேவ் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர். 634 ரூபாய் 50 பைசா பங்குகளைக் கொண்ட அவரின் புறக்கணிப்பால் இனி நாங்கள் எப்படி இயங்குவோம் என்பதே தெரியாமல் நிற்கிறோம். தயவுசெய்து அவர் தன்னுடைய புறக்கணிப்பு முடிவைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

"இது ஒரு சிறப்பு வகையான புறக்கணிப்பு, ஏனெனில் இது b-y-c-o-t-t. வாசுதேவ், உங்கள் டிக்டோக் வீடியோக்களை உருவாக்க நாங்கள் உங்களுக்கு ஒரு முழு விமானத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். இல்லை என்றால் இரண்டு லிட்டர் பெட்ரோலை இலவசமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?