England Twitter
உலகம்

கணவனுடைய ஆவியின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட பெண்.. நடந்தது என்ன.?

Priyadharshini R

இங்கிலாந்திலுள்ள ஸ்விண்டனில் வசித்து வருபவர் தான் ஆஷா. இவரின் கணவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மூளையில் வீக்கம் ஏற்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார்.

கணவரின் பிரிவை தாங்க முடியாமல் தினம் தினம் வாடி வந்த தாயை கண்டு மகள் சாஃப்ரான் மனவேதனை அடைந்தார். தாயை எப்படியாவது, முன்பு போன்று இயல்பு நிலைக்கு மீட்க வேண்டும் என்று எண்ணிய சாஃப்ரான், அவிகளுடன் பேசும் கெரின் ( வயது 60 ) என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு சாஃப்ரானுக்கு ஒரு நம்பிக்கை தரவே, தன் தாயிடம் இது குறித்து கூறி, கெரினை சந்திக்குமாறு கேட்டுள்ளார்.

ஆஷா, சாஃப்ரன், ஜான்

அங்கு தான் நடந்தது ஒரு டுவிஸ்ட், கெரினை சந்திக்கச் சென்ற ஆஷா, அவரை பார்த்ததுமே ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் அதிசயம் என்னவென்றால் அதே உணர்வு கெரினும் இருந்துள்ளது. இருவரும் எத்தனையோ ஜென்மங்களாக தங்களுக்குள் பந்தம் இருந்தது போல உணர்ந்தார்களாம்.

பின்னர் ஆஷா, சாஃப்ரன் மற்றும் கெரின் மூவருமாக ஆவிகளுடன் பேசும் மற்றொருவரை சந்திந்து பேசியுள்ளனர். அந்த நபர், சமீபத்தில்

இறந்த, நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சினை கொண்ட ஒருவரை தான் காண்பதாக கூற, அது தன் கணவர் ஜான்தான் என்று ஆஷா நம்பியுள்ளார். மேலும் இவையெல்லாம் ஏன் நடக்க வேண்டும் என்று எண்ணிய ஆஷா, கெரினையும் சந்திக்க வைத்ததற்கு ஜான் ஆவி தான் காரணம் என்றும் கெரினுடன் இணைந்து வாழவேண்டும் என ஜான் விரும்புவதாகவும் நம்பியுள்ளார்.

ஆஷா, சாஃப்ரன், கெரின்

இதற்கிடையில், ஒரு நாள் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கெரின் ஆஷாவிடம் கேட்க, அவரும் அதற்கு சம்மதிக்க, கெரினும் ஆஷாவும் ஜானுடைய ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?