Red Panda Canva
உலகம்

Red Panda : வாலையே போர்வையாக பயன்படுத்தும் சிவப்பு பாண்டா - 7 அசர வைக்கும் தகவல்கள்

Priyadharshini R

நம்மில் பலருக்கு கருப்பு - வெள்ளை பாண்டா பற்றி தெரியும், ஆனால் சிவப்பு பாண்டா குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா? சிவப்பு பாண்டா பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் முங்கிலையே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும்.

அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இந்த சிவப்பு பாண்டா குறித்து இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மூங்கில் உணவு

சிவப்பு பாண்டாக்கள் 98% மூங்கிலை உணவாக சாப்பிடுகின்றனர். எப்போதாவது முட்டை, பூச்சிகள், பூக்கள், பறவைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளையும் சாப்பிடும்.

பல பெயர்கள் உண்டு

  • ஃபயர்பாக்ஸ்

  • சிவப்பு கரடிப் பூனை

  • சிறிய பாண்டா

உள்ளிட்ட பல பெயர்களால் இவை அறியப்படுகின்றன.

தங்குமிடம்

சிவப்பு பாண்டாக்கள் ஒரு வெற்று மரத்திலோ அல்லது மரத்தடியிலோ பிரசவக் குகையை உருவாக்கி, அதில் இலைகள், புல், பாசி மற்றும் மரக்கிளைகளால் வரிசையாக தங்கள் குஞ்சுகளுக்கு கூடு கட்டுகிறது. பிரசவித்த முதல் மூன்று மாதங்களுக்கு அவை குகைகளில் இருக்குமாம்.

அதிக நேர உறக்கம்

சிவப்பு பாண்டாக்கள் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வரை தூங்கும்! அதாவது ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கினை அவை தூங்குவதற்கே செலவிடுகின்றன. மரக்கிளைகளிலோ அல்லது மரத்தின் குழிகளிலோ ஓய்வெடுக்க விரும்புகின்றன.

வாலில் தூங்குகின்றன

ஒரு சிவப்பு பாண்டாவின் வால் 12 முதல் 20 அங்குல நீளம் வரை அளவிட முடியும். சிவப்பு பாண்டாக்கள் தங்கள் வாலில் தூங்குகின்றன. குளிர்ச்சியான மலை வாழ்விடங்களில் இந்த வால்களை போர்வைகளாகவும் பயன்படுத்துகின்றன.

இருட்டில் ஒளிரும்

சிவப்பு பாண்டாவின் முகத்தில் உள்ள வெள்ளை நிறம் ஒளிருமாம். இருளில் குட்டிகளுக்கு இது வழிகாட்டுமாம்.

பின்னங்கால்களில் நிற்கின்றன

அச்சுறுத்தப்படும்போது, ​​சிவப்பு பாண்டாக்கள் பெரியதாகத் தோன்ற அவற்றின் பின்னங்கால்களில் நிற்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?