ஆப்பிள் நிறுவனம் : இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெற்றி பாதையில் வீறுநடை NewsSense
உலகம்

ஆப்பிள் நிறுவனம் : இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெற்றி பாதையில் வீறுநடை

Govind

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கடந்த செவ்வாயன்று ஆதாயம் அடையும் நிலையை அடைந்தது. கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வெற்றி இப்போது மீண்டும் வந்திருக்கிறது. பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் என்று கருதியிருந்த நிதி முதலீட்டாளர்கள் மீண்டும் தொழில் நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றனர்.

பங்குச் சந்தையில்

நியூயார்க் பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து 11 வது நாளாக பங்கு விலையில் 1.9% அளவுக்கு உயர்ந்து ஒரு பங்கிற்கு 178.96 டாலர் விலைக்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் ஆப்பிளின் பங்கு 3 டாலர் குறைந்து காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் தொழில்நுட்ப பங்கு சந்தை வர்த்தகத்தில் வறட்சிக்கு பதில் பசுமை காணப்படுகிறது. இதே போன்றதொரு வளர்ச்சி Nvidia (செயற்கை நுண்ணறிவு நிறுவனம்) மற்றும் அமேசான் நிறுவனத்தின் பங்குகளிலும் காணப்படுகிறது.

"உண்மையில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கும் எதிர்காலத்தை கணக்கிட கடினமாக இருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாங்கள் பார்க்கிறோம்" என்று கெர்பர் கவாசாகி எனும் நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ் கெர்பர் கூறினார். மக்களும் அதிவேகமாக வளரும் நிறுவனங்கள் வருமானத்தை அதிகம் ஈட்டும் பட்சத்தில் அந்நிறுவனங்களில் பணத்தை கட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

உக்ரைன் போர்

உக்ரைன் போரினால் நிதி முதலீட்டு சந்தையில் அபாயம் அதிகரித்திருந்தாலும் ஆப்பிளின் இலாபம் அதிகரித்திருக்கிது. ஆப்பிளின் ஒரு பங்கு ஈட்டும் வருமானம் மட்டும் இந்த வருடத்தில் 8.6% உயர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே போன்று S&P 500 என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் பெரும் 500 நிறுவனங்களின் பங்கு வர்த்தக குறியீட்டுப் பட்டியலும் 4.6% உயர்ந்திருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகள் தெரவிக்கின்றது.

Nikkei எனப்படும் டோக்கியோவின் பங்குச்சந்தையின் அறிக்கையில் இந்த ஆண்டு நிறுவனங்களின் உற்பத்தி குறையுமென கூறியிருந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் அந்த அறிக்கையை புறக்கணித்து 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு சந்தையில் தங்கள் பங்குகளை அதிகரித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் ஆப்பிள், அமேசான் மற்றும் Nvidia நிறுவனங்களின் பங்குகள் புயல் வேகத்தில் விலை அதிகரித்து வருகின்றன.

எதிர்கால லாபம்

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை பல மடங்கு உயர்த்தும் என அறிகுறிகளைக் காட்டியது. இந்த ஆண்டின் கடினமான துவக்கத்திற்கு பிறகு தொழில் நுட்ப நிறுவனங்கள் சற்றே வளர்ந்து வருகின்றன. அதிக வட்டி விகிதங்கள் எதிர்கால லாபத்தின் மதிப்பை பாதிக்கிறது. அதே போல பங்குகளின் விலையையும் பாதிக்கிறது.

இருப்பினும் இத்துறையை விட்டு வெளியேறிய முதலீட்டாளர்கள் மீண்டும் வரத்துவங்கியுள்ளனர். பெருந்த தொழில் நுட்ப நிறுவனங்களில் வரவு செலவு அறிக்கை வலுவாக இருப்பதாலும், அதற்கான சந்தைகள் சான்றாக கிளவுட் கம்யூட்டிங் போன்றவை வேகமாக வளருவதாலும் இதில் பெரும் இலாபம் வருமென முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் அதிக வலுவுடன் திறமையாக வளருவதால் அதன் மதிப்பு கூடி வருகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆப்பிள் தவிர நியூயார்க்கின் நாஸ்டாக் பங்கு சந்தையில் அமேசான் 0.2%, கூகிளின் ஆல்ஃபாபெட் நிறுவனம் 0.7%, மைக்ரோசாஃப்ட் 1.5% ஏற்றம் கண்டன. இந்த வளர்ச்சிகள் இருந்தாலும் நாஸ்டாக்கின் பட்டியலிடப்பட்ட 100 நிறுவனங்களின் பங்கு சந்தை வர்த்தகம் 7% குறைந்திருக்கிறது.

இருப்பினும் உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்த போதிலும், கோவிட் பொது முடக்கத்தால் உலகம் முடங்கிப் போயிருந்தாலும் எதிர்காலம் என்பது பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இருப்பதால் ஆப்பிளின் வர்த்தக மதிப்பு கூடி வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?