NATO -வில் இணைந்தது பின்லாந்து : "எதிர்வினைகளை சந்திக்க வேண்டும்" - மிரட்டும் ரஷ்யா! Twitter
உலகம்

NATO-வில் இணைந்தது பின்லாந்து: "எதிர்வினைகளை சந்திக்க வேண்டும்" - மிரட்டும் ரஷ்யா!

பின்லாந்து ரஷ்யாவுடன் 1800 கி.மீ எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இப்போது நேட்டோவில் இணைந்துள்ளதால் "ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகவும் கருதப்படும்" என நேட்டோ உறுதியளிக்கிறது.

Antony Ajay R

நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பினராக இணைந்துள்ளது பின்லாந்து. இதனால் ரஷ்யா, பின்லாந்து எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

ரஷ்யா கடந்த ஆண்டு உக்ரைன் மீது முழு ஆக்கிரமிப்பு படையெடுப்பை மேற்கொண்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்களது பாதுகாப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பகுதியாகவே பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "சில ஆண்டுகளுக்கு முன்பு பின்லாந்து எங்கள் கூட்டணியின் அங்கமாக இருக்கும் என யாரும் நினைத்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் இப்போது அவர்கள் முழுமையான உறுப்பினர். இது வரலாற்று சிறப்புமிக்கது" எனக் கூறியுள்ளார்.

ஆனால் ரஷ்யாவோ பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கை எனக் கருதுகிறது.

ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இதுபோன்ற தந்திரமான நடவடிக்கைகள் நம்மை எதிர்நடவடிக்கை எடுக்கத் தூண்டுகின்றன" எனக் கூறியுள்ளார்.

பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளதால் "ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகவும் கருதப்படும்" என நேட்டோ உறுதியளிக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின் தனது அண்டை நாடுகளில் நேட்டோ இருப்பதை விரும்பவில்லை. ஐரோப்பாவில் வேறெந்த நாடுகளும் நேட்டோவில் இணையக் கூடாது என எண்ணினார். ஆனால் அவரது எண்ணத்துக்கு மாறான சம்பவங்களே நடந்துக்கொண்டிருக்கின்றன.

பின்லாந்து ரஷ்யாவுடன் 1800 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நேட்டோவில் இணைந்திருந்தாலும் பாதுகாப்புக்காக நட்பு நாடுகளின் இராணுவங்களை தங்கள் மண்ணில் நிறுத்துவது குறித்து இதுவரை பின்லாந்து முடிவெடுக்கவில்லை.

ரஷ்யா அடுத்ததாக பின்லாந்தை தாக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் மற்ற நேட்டோ நாடுகள் ரஷ்யாவை உக்ரைன் போரில் வெல்ல உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கியிருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?