african soldiers Twitter
உலகம்

Morning News Today: ஆப்பிரிக்க கிராமத்தில் நடந்த தாக்குதல் - 50 பேர் பலி

NewsSense Editorial Team

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இங்கு, 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதை ஒடுக்க முடியாமல் அந்நாட்டு ராணுவம் திணறி வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கோம்பிங்கா மாகாணம், மட்ஜோரி நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்தனர். கிராமத்தின் வீடுகளைச் சூறையாடிப் பார்க்கும் மக்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும், ஆயுதங்களால் வெட்டியும் கொடூர தாக்குதல் நடத்தினர்.

இந்த கொலைவெறித் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 50‌ பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கருணாநிதி

கருணாநிதியின் 16 அடி உயர சிலை திறப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான மறைந்த கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என ஆட்சிப் பொறுப்பேற்றபின், திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக அரசு சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதிக்கு ரூ.1.70 கோடி செலவில் 16 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்தியாவின், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்துப் பேசினார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சிலை திறப்புக்குப்பின், அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

anbumani ramadoss

2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி அமையும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், பா.ம.க -வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சியின் தலைவா் ஜி.கே.மணி, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, இளைஞரணித் தலைவராகப் பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி அமையும். அதற்கான `பாட்டாளி மாடல்' கொள்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்." என்றார்.

PM modi

89 - மனதின் குரல் நிகழ்ச்சி - பிரதமர் மோடி இன்று உரை

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அப்போது முதல், அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்குத் தொடங்குகிறது. இது 89-வது மனதின் குரல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன், ஏஐஆர் நியூஸ் இணையதளம் மற்றும் நியூசனேர் மொபைல் செயலி ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

பலரும் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?