Barack Obama  Twitter
உலகம்

கல்யாணம் செய்யப் போகிறீர்களா? இந்த 3 கேள்விகள் முக்கியம் - ஒபாமாவின் அட்வைஸ் என்ன?

Priyadharshini R

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் நிச்சயம் இந்த மூன்று கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இரு மனங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரைத் திருமணம் என்பது வாழ்வின் முக்கியமான பந்தமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் அயல் நாடுகளில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக உள்ளது, இந்த நிலையில் பாராக் ஒபாமா மிஷெல் இருவரும் சிறந்த கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

இந்த நிலையில் தங்களைப் போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் இதோ

உங்கள் பாட்னர் எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரைவிடவும் உங்கள் பாட்னருடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வ மிக்கவராக இருக்க வேண்டும், அவர் எதில் ஆர்வாமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் பாட்னர் என்ன நினைக்கிறார்? என்ன செய்யப்போகிறார் ? என்பதை கணித்து அதற்கேற்றவாரு நீங்கள் நடந்துக்கொள்ள முடியும்

இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்

உங்க பாட்னர் காமெடி குணம் உள்ளவரா?

உங்களுக்கு வரும் பாட்னருக்கு நகைச்சுவை திறன் இருக்கவேண்டியது அவசியம் எங்கிறார் ஒபாமா. தான் செய்யும் ஒரு செயலில் அவரால் நகைச்சுவையை உணர முடிகிறது என்றால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதையலாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கும் நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும். உங்களின் திருமண வாழ்க்கையினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகிறார்.

உங்க பாட்னர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் பாட்னரை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்கக்கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் பாட்னரை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?