Work From Home செய்ய டாப் 10 பாதுகாப்பான நாடுகள் இது தான் - இந்தியாவின் இடம் என்ன? Canva
உலகம்

Work From Home செய்ய டாப் 10 பாதுகாப்பான நாடுகள் இது தான் - இந்தியாவின் இடம் என்ன?

Keerthanaa R

கொரோனா பெருதொற்று வந்து உலகை ஆட்டிப்படைத்த சமயத்தில், புதியதாக பல வழக்கங்கள் தோன்றின.

அதனை நியூ நார்மல் என்று பெயரிட்டு அழைத்தோம். அந்த நியூ நார்மலில் கற்றுக்கொண்ட பல விஷயங்களில் ஒன்று தான் Work From Home, அதாவது வீட்டில் இருந்தே வேலை

இதனை ரிமோட் ஒர்க்கிங் என்றும் கூட சொல்லலாம். அதாவது, அலுவலகத்துக்கு செல்லாமல், நாம் இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்வதே ரிமோட் ஒர்க்கிங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய மாற்றத்தால் பல நிறுவனங்களிலும், உற்பத்தி திறன் மேம்பட்டது. அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வதை விட இந்த பழக்கம் ஊழியர்களுக்கு அதிக உற்சாகம் மற்றும் பணித்திறனை தந்தது.

இப்படி ரிமோட் ஒர்க் செய்ய பாதுகாப்பான மற்றும் சிறந்த பத்து நாடுகள் என்னென்ன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது.

நார்ட்லேயர் என்கிற சைபர் செக்யூட்டி நிறுவனம், Global Remote Work Index-ஐ வெளியிட்டது, அதில் இந்த நாடுகள் இடம்பெற்றன.

இந்த நான்கு அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

  • ஆன்லைன் பாதுகாப்பு

  • பொருளாதாரம்

  • டிஜிட்டல் மற்றும் இயற்பியல் கட்டமைப்பு

  • சமூக பாதுகாப்பு

இந்த கணக்கெடுப்பில், 108 நாடுகள் ஆராயப்பட்டன

டாப் 10 பாதுகாப்பான நாடுகள் என்னென்ன?

  • டென்மார்க்

  • நெதர்லாந்து

  • ஜெர்மனி

  • ஸ்பெயின்

  • ஸ்வீடன்

  • போர்ச்சுகல்

  • எஸ்டோனியா

  • லிதுவேனியா

  • அயர்லாந்து

  • ஸ்லோவாக்கியா

முதலிடத்தில் உள்ள டென்மார்க், ஆன்லைன் செக்யூரிட்டியில் மட்டும் சற்றே பின் தங்கியுள்ளது. இந்த கேட்டகரியில், டென்மார்க் 13வது இடத்தில் இருக்கிறது.

ஆனால், மற்ற மூன்று கேட்டகரிக்களில் செழிப்பாக இருக்கிறது டென்மார்க். கடைசி இடங்களில் உள்ள எஸ்டோனியா, லிதுவேனியா, ஸ்லோவாக்கிய நாடுகளில் இந்த ஆன்லைன் பாதுகாப்பு சிறந்து விளங்குவதாக இந்த Global Remote Work Index தெரிவிக்கிறது.

இந்த நாடுகளை தவிர, 15வது இடத்தில் பிரான்ஸ் நாடு இருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 5 இடங்கள் பின்தங்கியுள்ளது.

இந்த தரவரிசையில், இந்தியா இந்த ஆண்டு 64வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 49வது இடத்தில் இந்தியா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?