இது என்னடா பித்தலாட்டம்! சாண்ட்விச்சை இரண்டாக வெட்டியதற்கு கூடுதலாக ரூ.180 பெற்றதா உணவகம்? canva
உலகம்

இது என்னடா பித்தலாட்டம்! சாண்ட்விச்சை இரண்டாக வெட்டியதற்கு கூடுதலாக 180 ரூபாயா?

Keerthanaa R

ஆர்டர் செய்த சாண்ட்விச்சை இரண்டாக வெட்டி தருமாறு கேட்ட வாடிக்கையாளரிடம் கூடுதலாக ரூ.180 வசூலித்துள்ளது இத்தாலி உணவகம் ஒன்று.

நாம் உணவகங்களுக்கு செல்லும்போது பட்ஜெட் வைத்து சாப்பிடுவது இயலாத காரியம் தான். அதிலும் குறிப்பாக சுற்றுலாவுக்கோ அல்லது வேறு சில காரணங்களுக்காக வெளியூர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்கிறோம் என்றால் அங்கு உணவின் சுவை, அளவு மற்றும் விலை என அனைத்தையும் கணக்கில் கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

உலகெங்கிலும் பல்வேறு உணவகங்களில் நமக்கு தரப்படும் சேவைகளுக்கு சர்வீஸ் டேக்ஸ் என்று ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.

அப்படி தான் இந்த இத்தாலி உணவகமும் வசூலித்திருக்கிறது. ஆனால் அதன் காரணமும், உணவக உரிமையாளர் தந்த விளக்கமும் சற்றே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சமீபத்தில் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் ஒரு நபர். பெயர் வெளியிட விரும்பாத அவர் இத்தாலியில் உள்ள கோமோ ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் பார் பேஸ் இன் ஜெரா லயோ என்ற உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.

அங்கு சாண்ட்விச் ஒன்றினை ஆர்டர் செய்திருக்கிறார். அந்த சாண்ட்விச்சினை இரண்டாக வெட்டி தருமாறு அவர் கேட்டிருக்கிறார்.

சாப்பிட்டு முடித்து பில் கட்டிவிட்டு வந்துவிட்டார். அதன் பிறகு தனது அனுபவத்தை, அந்த ரெஸ்டாரண்ட் பற்றிய ரிவ்யூவை மிகவும் மனவருத்ததுடன் பதிவிட்டிருந்தார்.

கொடுக்கப்பட்ட பில்லில், இரண்டு யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.180 கூடுதலாக போடப்பட்டுள்ளது. எதற்கு என்று ஆராய்ந்து பார்த்ததில் அதில் ’டிவிசோ எ மெடா’ "diviso a meta" என்றிருந்தது.

சாண்ட்விச்சை இரண்டாய் வெட்டியதற்கு கட்டணமாம்!

இது என்னடா பித்தலாட்டமா இருக்கு? என்பது போல அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த உணவக உரிமையாளரோ, தங்களின் செயலுக்கு காரணம் தெரிவித்திருந்தார். அந்த சாண்ட்விச்சை ஒரண்டாக வெட்டி அதற்கு தனித்தனியாக இரண்டு தட்டுகள் வழங்கப்பட்டன.

ஒரு பிளேட்டை சுத்தம் செய்யும் நேரத்தில் கூடுதலாக இன்னுமொரு பிளேட் சுத்தம் செய்யவேண்டும். நேரம், தண்ணீர் எங்கள் ஊழியர்களின் ஆற்றல் என எல்லாம் செலவாகிறது.

மேலும் அது ஸ்பெஷல் சாண்ட்விச் என்பதால் வெட்டுவதற்கும் நேரமானது.

வாடிக்கையாளர் எங்களிடம் அப்போதே நேரில் கேட்டிருந்தால், அந்த கட்டணத்தை நாங்கள் ரத்து செய்திருப்போம் என்றும் கூறியதாக அறிக்கைகள் சொல்லுகின்றன.

எது எப்படியோ, 180 ரூபாய் அழுதது தான் மிச்சம்! நம் ஊர் மார்க்கெட்டில் மீன கூறுகூறாக வெட்டக்கூட இவ்வளவு கட்டணம் கேட்கமாட்டார்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?