3 குழந்தைகளுக்கு விரைவில் பார்வை இழப்பு- உலக சுற்றுலா செல்லும் குடும்பம் Twitter
உலகம்

பார்வை இழக்கப்போகும் குழந்தைகள்: உலக சுற்றுலா கூட்டிச் சென்ற பெற்றோர் - நெகிழவைக்கும் கதை!

இந்த குழந்தைகள் அனைவருமே விரைவில் பார்வை இழப்புக்கு ஆளாகப் போகின்றனர். இந்த நிலையில் தான் இவர்கள் பார்வை இழப்பதற்கு முன்னர் அவர்களுக்கு அதிக காட்சிகளை, நினைவுகளை கொண்டு சேர்க்க வேண்டுமென இந்த குடும்பம் உலக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.

Antony Ajay R

கனடாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று குழந்தைகளுக்கு கூடிய விரைவில் கண்பார்வை இழப்பு ஏற்படக் கூடிய நிலையில் அவர்களது பெற்றோர் அவர்களை உலக சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருக்கும் நிகழ்வு மனமுருகச் செய்கிறது.

செபஸ்டியன் மற்றும் எடித் லெமே தம்பதியினருக்கு 4 குழந்தைகள். அவர்களில் மூத்த மகளான மியா லெமேக்கு (12) கடந்த 2018ம் ஆண்டு ரெட்டினிடிஸ் பிக்மெண்டோசா என்ற மரபியல் பார்வை நோய் இருப்பது தெரியவந்தது.

அடுத்த ஆண்டே மூன்றாவது மகன் கோலின் (7) மற்றும் லாரன்ட் (5) ஆகியோருக்கும் அதே பிரச்னை இருப்பது தெரியவந்தது. இரண்டாவது மகன் மட்டும் இந்த பிரச்னையிலிருந்து தப்பினார்.

ரெட்டினிடிஸ் பிக்மெண்டோசா ஒரு மரபியல் பார்வைக் குறைபாட்டு நோய். இதற்கு எந்த மருத்துவமும் கிடையாது. மூத்த மகளான மியா கடந்த 2018 முதல் மாலை வேளையில் பார்வைக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் 30களில் முழுவதுமாக பார்வை இழக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குழந்தைகள் அனைவருமே விரைவில் பார்வை இழப்புக்கு ஆளாகப் போகின்றனர். இந்த நிலையில் தான் இவர்கள் பார்வை இழப்பதற்கு முன்னர் அவர்களுக்கு அதிக காட்சிகளை, நினைவுகளை கொண்டு சேர்க்க வேண்டுமென இந்த குடும்பம் உலக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.

தற்போது நமீபியா, ஜாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா ஆகிய நாடுகளைக் கடந்து இந்தோனீசியாவைச் சுற்றிப்பார்த்து வருகிறது இந்தக் குடும்பம். முன்னதாக சீனா மற்றும் ரஷ்யா வழியாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இவர்களின் திட்டமாம். ஆனால் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்த நாடுகளுக்கு செல்ல முடியவில்லை.

"வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அவர்களால் தினமும் பள்ளிக்கு செல்ல முடிவதும், வீட்டில் தண்ணீர் இருப்பதுமே அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதற்கான அடையாளம் தான்" என்பதை உணர்த்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டதாக எடித் லெமோ கூறுகிறார்.

ரெட்டினிடிஸ் பிக்மெண்டோசா ஒரு மரபியல் நோய். கண்ணில் உள்ள ஒளியை உள்வாங்கும் ரெட்டினிடிஸ் பகுதியில் உள்ள செல்கள் செயலிழப்பால் மெதுவாக பார்வைக் குறைபாடு ஏற்படும். இருட்டில் பார்வை இல்லாமல் இருப்பது இதன் முதல் அறிகுறியாகும். 30 களில் முழுமையான பார்வை இழப்பு ஏற்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?