பிரிட்டன் மக்கள் மூதாதையர்கள் கருப்புத் தோல் கொண்டவர்கள் Archealogy
உலகம்

பிரிட்டன் மக்கள் மூதாதையர்கள் கருப்புத் தோல் கொண்டவர்கள் - ஆச்சர்ய ஆய்வு முடிவு

Govind

9000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூட்டின் மரபணு பரிசோதிக்கப்பட்டபோது அதே மரபணுவை கொண்ட ஒருவர் வரலாற்றை கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது"

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சோமர்செட்டில் வாழ்பவர் அட்ரியின் டார்கெட். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் செய்தி முகவர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கே செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் அவருக்கு பழக்கமான முகம் ஒன்று இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்த முகம் அவரது தொலைதூர உறவினருக்கு சொந்தமானது. அதாவது 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய செடார் மனிதனுடையது.

செடார் மனிதனின் பண்டைய மரபணு

1903 ஆம் ஆண்டு சோமர்செட்டில் உள்ள செடார் கோர்ஜில் உள்ள கோஃப்ஸ் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட செடார் மனிதனின் பண்டைய மரபணு அல்லது டிஎன்ஏ வைக் கொண்ட மெசோலிதிக் எலும்புக்கூடு, பிரிட்டனில் உள்ள பழமையான நவீன மனிதர்களில் ஒருவரின் உருவப்படத்தை வரைவதற்கு அருங்காட்சியக விஞ்ஞானிகளுக்கு உதவியது.

இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பா முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்ட பல இடைக் கற்கால மனித எச்சங்களுடன் ஒத்துப் போகிறது. செடார் மனிதன் என்பது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான முழுமையான எலும்புக்கூடு. இம்மனிதன கிமு 7,150 இல் வாழ்ந்த முதல் நவீன பிரிட்டன் மனிதன் என்று நீண்ட காலமாகப் போற்றப்படுகிறது. அவரது எச்சங்கள் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், மனித பரிணாமக் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள செடார் பள்ளத்தாக்கில் இம்மனிதனது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் செடார் மனிதன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான மரபணு துப்பறியும் வேலையில் இறங்கினர். செடார் மனிதனிடம் பல் ஒன்றின் குழியிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவை ஆய்வு செய்து இன்றைக்கு வரலாற்று ஆசிரியராக இருக்கும் திரு டார்கெட் அந்த மனிதனது வழித்தோன்றல் என்பதை நிரூபித்தனர்.

ஐரோப்பிய வேட்டையாடும் மக்கள்

செடார் மனிதனது மரபணுவின் பகுப்பாய்வு அவர் ஐரோப்பிய வேட்டையாடும் மக்கள் தொகையில் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதைக் குறிக்கிறது. வெளிர் நிறக் கண்கள், அடர் பழுப்பு அல்லது கருப்புமுடி, இருண்ட, அடர்ந்த கருப்புத் தோலுடன் அவர் இருந்திருப்பார். அல்லது அவர் இடைநிலை தோல்நிறத்தையும் பெற்றிருப்பதை நிராகரிக்க முடியாது.

குறைக்கப்பட்ட நிறமியுடன் தொடர்புடைய சில மரபணு மாறுபாடுகள் சில இன்று ஐரோப்பிய மக்கள் தொகையில் மிகவும் பரவலாக உள்ளன. இருப்பினும் செடார் மனிதன் இந்த அனைத்து மரபணுக்களின் மூதாதையர் மரபணு பதிப்புகளைக் கொண்டிருந்தார். அவர் கருப்பு தோலை பெற்றிருப்பார் என்பது உறுதியாகக் கூறப்படுகிறது. எனவே இன்றைய வெள்ளையர்களின் மூதாதையர்களின் நிறம் நம்மைப் போன்று கருப்புதான்.

இப்போது செடர் மேன் மீண்டும் தலைப்புச் செய்திகளில் வந்துள்ளார். ஏனெனில் அவரது மரபணு பற்றிய புதிய ஆய்வு, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது முக அம்சங்கள், தோல் மற்றும் கண் வண்ணம் மற்றும் முடி அமைப்பு ஆகியவற்றின் தடயவியல் மறுகட்டமைப்பை உருவாக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளது. மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த பண்டைய பிரிட்டன் மனிதன் கருப்பு தோல் - மற்றும் பிரகாசமான நீல நிற கண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.

"இப்போது நான் இன்னும் கொஞ்சம் பன்முக கலாச்சாரமாக உணர்கிறேன்,” என்று டார்கெட் சிரிக்கிறார். "மேலும் ஒரு குடும்ப ஒற்றுமை இருப்பதை என்னால் நிச்சயமாக பார்க்க முடிகிறது. அந்த மூக்கு என்னுடையது போலவே இருக்கிறது. நாங்கள் இருவரும் அந்த நீல நிற கண்களைப் பெற்றுள்ளோம்.” என்கிறார்.

1997 ஆம் ஆண்டு சோமர்செட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பற்றிய தொலைக்காட்சி தொடருக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப அறிவியல் பகுப்பாய்வு, திரு டார்கெட்டின் குடும்ப வரிசை சுமார் ஒன்பது ஆயிரம் ஆண்டுகளாக செடார் கார்ஜ் பகுதியில் நீடித்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றின் மரபணுக்கள் மைட்டோகாண்ட்ரியல் எனப்படும் தாயிடமிருந்து மகளுக்கு அனுப்பப்பட்டது. அவை கருவணு முட்டையிலிருந்து பரம்பரையாக வரும் மரபணு ஆகும்.

எளிமையாகச் சொல்வதென்றால், அட்ரியன் டார்கெட் மற்றும் செடார் மனிதனுக்கு பொதுவான தாய்வழி மூதாதையர் உள்ளனர்.

கருமையான தோல்

செடார் மனிதனின் தோல் வண்ணம் மட்டுமே இந்த பரந்த கால இடைவெளியில் வித்தியாசத்தைக் குறிக்கிறது. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித தோல் நிறம் இலகுவானதாக கருதப்பட்டது. ஏனெனில் மக்கள் கடுமையான ஆப்பிரிக்க சூரிய ஒளியில் இருந்து வடக்கே இடம்பெயர்ந்தனர். அங்கு கருமையான தோல் ஒரு பாதுகாப்பு செயல்பாட்டைக் கொண்டிருந்தது.

குறைந்த வெயில் அட்சரேகைகளில், இலகுவான தோல் ஒரு பரிணாம நன்மையை வழங்கியிருக்கும். ஏனெனில் இது அதிக சூரிய ஒளியை உறிஞ்சுகிறது. இது வைட்டமின் டி யை உற்பத்தி செய்யத் தேவைப்படுகிறது. இது எலும்பு நோய் ரிக்கெட்ஸ் போன்ற செயலிழக்கும் நோய்களைத் தடுப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். பின்னர், விவசாய பயிர்கள், வேட்டையாடுபவர்களின் வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கியபோது, ​​சமூகங்கள் குறைந்த இறைச்சி, மற்றும் வைட்டமின் D இன் உணவு ஆதாரமான மீன் எண்ணெய் போன்றவற்றை உண்ட போது வெளிர் தோல்களுக்கு இன்னும் பெரிய பலனை அளித்து தொடர்புடைய மரபணுக்களின் பரவலை துரிதப்படுத்தியது.

இருப்பினும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை மரபியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, செடார் மேனின் நிறமானது, இலகுவான தோலுடன் இணைக்கப்பட்ட மரபணுக்களை பரிந்துரைக்கும் சமீபத்திய ஆராய்ச்சியுடன் 8,500 ஆண்டுகளுக்கு முன்புதான் பரவத் தொடங்கியது.

பழங்கால மனித எச்சங்கள்

3,000 வருட காலப்பகுதியில், திரு டார்கெட்டின் மூதாதையர்கள் போன்ற கருமையான நிறமுள்ள வேட்டைக்காரர்கள் மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த ஆரம்பகால விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் லேசான தோலுக்கான இரண்டு மரபணுக்களை (SLC24A5 மற்றும் SLC45A2) கொண்டு வந்தனர் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

செடார் பள்ளத்தாக்கு பழங்கால மனித எச்சங்களுக்கான பிரிட்டனின் முதன்மையான இடமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. செடர் மனிதன் ஒரு குகை வாய்க்கு அருகில் உள்ள அறையில் தனியாக புதைக்கப்பட்டார். ஆனால் அட்ரியன் டார்கெட்டுக்கு மட்டும் அவருடன் தொடர்பு இல்லை. உண்மையில் பல நவீன பிரிட்டன் மக்களுக்கு, செடார் மனிதனின் உண்மையான முகம் அவர்களின் கடந்த காலத்துடன் ஒரு தனித்துவமான நெருக்கமான மரபணு சந்திப்பை வழங்குகிறது. தற்கால பிரிட்டன் மக்கள் தங்களின் மரபியல் வம்சாவளியில் சுமார் 10 சதவீதத்தை மேற்கு ஐரோப்பிய வேட்டையாடுபவர்களிடமிருந்து பெற்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?