Valentine's Day: எந்தெந்த நாடுகளில் காதலர் தினத்துக்கு தடை? twitter
உலகம்

Valentine's Day: எந்தெந்த நாடுகளில் காதலர் தினத்துக்கு தடை?

மேற்கத்திய கலாச்சாரத்தை போற்றுவதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்த எதிர்ப்பு இருக்கிறது. அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம்

Keerthanaa R

பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பிப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது.

காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. அதுவும் சில சமயங்களில் சிலருக்கு போதுவதில்லை. எல்லா நாளும் காதலர் தினம் தான் என்று டயலாக் அடிப்பார்கள்.

இப்படி லவ் மூடில் ஒரு பக்கம் எல்லாரும் சுற்றிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை போற்றுவதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்த எதிர்ப்பு இருக்கிறது

அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம்

ஈரான்:

ஈரான் நாட்டில் காதலர் தினம் தொடர்பான எந்தவித கொண்டாட்டங்களும், நடவடிக்கைகளும் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தை போற்றும் விதமாக இருப்பதனால் வேலண்ட்டைன்ஸ் டேவிற்கு இங்கு தடை போடப்பட்டுள்ளது. காதலர் தினத்திற்கு பதிலாக மெஹ்ரெகன் என்ற வழக்கத்தை ஈரான் நாட்டு மக்கள் கடைப்பிடிக்கப்படு வருகிறது.

இத்தினம், அன்பு, நட்பு மற்றும் ஒற்றுமையை போற்றும் ஒரு முறை, மற்றும் இஸ்லாம் அறிமுகப்படுத்தபடுவதற்கு முன்பிருந்தே அனுசரிக்கப்பட்டு வருகிறது

மலேசியா:

கடந்த 2005 முதல் இஸ்லாமிய தலைவர்கள் இந்நாட்டில் காதலர் தினத்தைக் கொண்டாட ஃபட்வா போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் தவறான பாதையில் இட்டுச்செல்லும் ஒரு கருவியாக இருக்கிறது என்று பரவலாக நம்பப்படுவதால் காதலர் தினத்திற்கு இங்கு தடை உள்ளது.

தடையை மீறி காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் ஒழுக்க காவலர்களால் கைது செய்யப்படுவார்கள்.

பாகிஸ்தான்:

உலகின் இரண்டாவது அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்டுள்ள நாடு பாகிஸ்தான். இங்கும் காதலர் தினம் என்பது தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட முனைப்பாக இருந்தாலும் அங்கு பரவலாக இதற்கு தடை போடப்பட்டுள்ளது

இந்தோனேசியா:

இங்கு அதிகாரப்பூர்வமாக காதலர் தினத்தைக் கொண்டாட தடை இல்லையென்றாலும், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் காதலர் தின் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்

உஸ்பெகிஸ்தான்:

இங்கு 2012ஆம் ஆண்டு வரை காதலர் தினம் மிகப் பரவலாக கொண்டாடப்பட்டு தான் வந்தது. ஆனால் அதன் பிறகு, கல்வி அமைச்சின் அறிவொளி மற்றும் மதிப்புகளை மேம்படுத்துதல் துறை காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

காதலர் தினத்திற்கு பதிலாக இங்கும் மக்கள், முகலாய பேரரசர் பாபரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்

சவுதி அரேபியா:

பல மேற்கத்திய நாட்டு மக்கள் இங்கு குடிபெயர்ந்து, வேலைப்பார்த்துக்கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாத எந்த வழக்கங்களையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

அதோடு சவுதி அரேபியாவில், ஒரு தம்பதி பொது வெளியில் தங்களுக்குள் இருக்கும் அன்பை, அன்னியோனியத்தை வெளிக்காட்டுவதும் பாவமாக கருதப்படுகிறது.

காதலர் தினத்தைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின், அத்தினத்தில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். பொது இடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், கடைகள் என அனைத்து இடங்களிலும், காவலர்கள் மக்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார்கள்.

அரசின் தடையை மீறி யாரேனும் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?