ரயில்வே இணைப்பு என்பது உலகின் மிகப் பழமையான போக்குவரத்தாக கருதப்படுகிறது. உண்மையில், ரயில்வே நெட்வொர்க் பண்டைய கிரேக்கத்தில் கிமு 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
முதலில் இது சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நீராவி என்ஜின்களின் அறிமுகத்துடன், வணிக இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அவை மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்ல உதவுகிறது.
உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் ரயில்வே போக்குவரத்து பயன்படுத்தப்பட்டாலும், ரயில் போக்குவரத்து இல்லாத சில நாடுகள் உள்ளன.
அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
அன்டோரா பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும்.
அன்டோரா மக்கள்தொகை அடிப்படையில் 11வது சிறிய நாடாகும். இந்த நாட்டின் எல்லையில் சுமார் 1.2 மைல் தொலைவில் உள்ள துலூஸ் மற்றும் லாட்டூர்-டி-கரோலை இணைக்கும் பிரெஞ்சு ரயில் பாதையைத் தவிர, அன்டோராவில் வேறு ரயில்வே வழித்தடங்கள் இல்லை.
பூட்டான் தெற்காசியாவில் அமைந்துள்ள மிகச்சிறிய நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
பூட்டானில் இரயில்வே போக்குவரத்து இல்லை, ஆனால் பூட்டானின் தெற்குப் பகுதிகளை பரந்த இந்திய இரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் திட்டங்கள் உள்ளன.
நேபாளத்தில் உள்ள டோரிபாரி மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹஷிமாராவை இணைக்கும் 11 மைல் நீள வழித்தடத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
சைப்ரஸ், கிழக்கு மத்தியதரைக் கடலில் அனடோலியன் தீபகற்பத்தின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு.
தற்போது, சைப்ரஸில் ரயில் போக்குவரத்து சேவை இல்லை, ஆனால் 1905 முதல் 1951 வரை ரயில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி காரணங்களால் இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
குவைத் எண்ணெய் வளம் மிக்க நாடாகும், அதன் போக்குவரத்து அமைப்பு சாலைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தற்போது, குவைத்தில் ரயில் போக்குவரத்து இல்லை என்றாலும் பல ரயில்வே நெட்வொர்க் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
குவைத் நகரிலிருந்து ஓமன் வரை 1,200 மைல் நீளமுள்ள வழித்தடத்தை உருவாக்க நாடு திட்டமிட்டுள்ளது.
லிபியாவும் முன்பு ரயில்வே வசதிகள் இருந்த நாடு என்றாலும் தொடர் உள்நாட்டு போர் காரணமாக ரயில்வே இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
1965 முதல் லிபியாவில் ரயில் போக்குவரத்து இல்லை.
லிபியாவில் ஏராளமான ரயில்வே இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust