குரோஷியாவில் பாடும் கடல் தளம் அல்லது பிளாட்ஃபாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையுடன் அறிவியலும் சேர்ந்து இந்த அற்புதத்தை உருவாக்கியுள்ளனர்.
குரோஷியாவின் சேடார் என்ற இடத்தில், இருக்கும் கடலின் மீது ஒரு பிளாட்பாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் சீ ஆர்கன் (Sea Organ). உள்ளூர் மக்கள் இதனை Morske Orgulje என்று அழைக்கின்றனர்.
இந்த தளம் கட்டமைக்கபட்ட பிறகு, சேடார் குரோஷியாவின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறிவிட்டது
நிகோலா பேசிக் என்ற குரோஷிய கட்டடக்கலை நிபுணர் தான் இந்த தளத்தை உருவாக்கினார். குரோஷியாவின் ஒரு பெரிய நீர்முனை சீரமைப்பின் திட்டத்தின் பகுதியாக கட்டமைக்கப்பட்டது இந்த சீ ஆர்கன்.
இந்த தளம் பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான மேடை போல காட்சியளிக்கலாம். ஆனால் நீருக்கடியில், நீர்குழாய்கள், வாட்டர் சேனல்கள் கொண்டுள்ளது. இந்த கட்டமைப்பானது, ஏட்ரியாட்டிக் கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த குழாய்களுக்குள் அலைகள் வந்துபோகும்போது ஒரு சிம்ஃபனி ராகம் இயற்கையாக உருவாகிறது. ஒரு ஒரு முறை அலை அடித்து வெளியேறும்போதும் ஒவ்வொரு விதமான இசை உருவாகிறது
ஒரு இசைக்கருவியில் இருந்து தானே இசை நாதம் ஒலிக்கும்? அதனால் இந்த தளத்தை சீ ஆர்கன் (கருவி) என்று அழைக்க தொடங்கினர்.
இந்த கடலலைகள் எழுப்பும் இசைதான் இந்த இடத்தின் சிறப்பே. இந்த ஒலியில் அடங்கியிருக்கும் அமைதி, நமது மனதை இளகச் செய்கிறது.
வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டுகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன.
கடலலை அதிகமாக இருக்கும்போது சத்தம் அதிகமாகவும், குறைவாக இருக்கும்போது ஒரு மெல்லிய விசில் போலவும் ஒலிக்கிறது.
குரோஷியா சென்றால் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு இடம் இந்த Sea Organ
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust