Russia: போரில் தோல்வியடைந்தால் தப்பி செல்லவது எங்கே? - புதினின் ரகசிய திட்டம் கசிந்தது
Russia: போரில் தோல்வியடைந்தால் தப்பி செல்லவது எங்கே? - புதினின் ரகசிய திட்டம் கசிந்தது  Twitter
உலகம்

Russia: போரில் தோல்வியடைந்தால் தப்பி செல்லவது எங்கே? - புதினின் ரகசிய திட்டம் கசிந்தது

Antony Ajay R

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் விளாடிமிர் புதினும் ஒருவர். ரஷ்யாவின் மிகப்பெரிய நிலப்பரப்பு, உலக கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யா செலுத்தும் ஆளுமை, ரஷ்ய ராணுவம், சர்வதேச அரசியலில் ரஷ்யாவின் ஆதிக்கம், ஆதரவு என எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவர்களின் பலத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இடையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிப் போர், கிட்டத்தட்ட ஓராண்டுக் காலத்தை நிறைவு செய்யவிருக்கிறது. 

ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா போரில், ரஷ்யா செம அடி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், ரஷ்யா போரிட்டுப் பிடித்து வைத்திருந்த பல உக்ரைன் பகுதிகளை, மீண்டும் உக்ரைன் தட்டித் தூக்கிவிட்டதாகவும் பல செய்திகளைப் பார்க்க முடிந்தது. 

இப்படியே தொடர்ந்தால் இந்த போர் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்குமென நேட்டோ எச்சரித்தது இங்கு நினைவுகூரத்தக்கது. அது குறித்த செய்தியை இந்த இணைப்பில் விரிவாகப் படிக்கலாம். 

ரஷ்யா vs உக்ரைன் : இந்த போர் எந்த திசையில் செல்லும்? - இதுதான் கள நிலவரம்

ரஷ்யா vs உக்ரைன்

இதற்கிடையில் விளாடிமிர் புதின் இந்தப் போரில் தோற்றுவிட்டால் அவர் எங்குத் தப்பித்துச் செல்வார் என்பது தொடர்பான செய்திகள் பல வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பல்வேறு நாளிதழ்களும் புதின் இந்த இந்த நாடுகளுக்கு எல்லாம் தப்பித்துச் செல்ல வாய்ப்பு இருப்பதாக ஆரூடம் கூறுகின்றன. அப்பாஸ் கல்யமொவ் (Abbas Gallyamov) என்பவர் க்ரெம்ளினில் பேச்சுக் குறிப்புகளை எழுதிக் கொடுப்பவராக பணியாற்றியவர், அரசியல் பகுப்பாய்வாளர். அவருடைய கருத்தை வைத்து, நியூஸ் வீக் என்கிற பத்திரிகை ஒரு புதிய கோட்பாட்டை வெளியிட்டு இருக்கிறது.

இவற்றையும் படியுங்கள்:

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? ரஷ்யா மீதான தடைகள் என்ன?

ரஷ்யா: நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்; துரத்தும் அதிபர்- என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத போர் நடந்தால் எத்தனை பேர் உயிரிழப்பர்? : அதிர வைக்கும் தகவல்

வெனிசுலா

ஒருவேளை உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யா தோல்வியைச் சுவைத்தால், விளாடிமிர் புதின் வெனிசுலா நாட்டுக்குத் தப்பிச் செல்வது குறித்து ஆலோசிக்கலாம் என அப்பாஸ் தன் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் அவருடைய நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தனக்குத் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.  ஏற்கனவே வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கு நல்ல உறவுமுறை நிலவி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.

பொதுவாக இது போன்ற ரகசிய விஷயங்களை நான் பொதுவெளியில் பகிரமாட்டேன், ஆனால் இன்று நான் அதிலிருந்து விலகி இந்த விஷயத்தை வெளியே சொல்கிறேன். காரணம், எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னவரை நான் அதிகமாக நம்புகிறேன்.

இந்த புதிய தப்பிக்கும் திட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற பெயர் Noah's Ark என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்நெஃப்டின் (Rosneft) உயர் பதவிகளிலிருந்த யூரி குரிலின் (Yury Kurilin)  பொறுப்பில் இருப்பதாக சில வலைத்தளங்கள் சொல்கின்றன. ஆனால் அவர் ராஸ்நெஃப்ட் நிறுவன பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டதாக ஒரு சில வலைத்தளங்கள் சொல்கின்றன.

கலிஃபோர்னியாவின் ஹேவெர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, பிபி ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தில் உயர் பதவிகளில் எல்லாம் பணியாற்றியவர். அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், மேல்மட்டத்தில் பலரோடு நல்ல தொடர்பில் இருக்கக் கூடியவர் என்பதால் புதின் தப்பிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பார் என சில வலைத்தளங்கள் சான்றிதழ் கொடுக்கின்றன.

சிரியா

இதற்கு முன் "தி டெய்லி மெயில்" என்கிற பத்திரிகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தப்பிக்க முடிவு செய்தால், சிரியாவுக்கு தப்பித்துச் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறி இருந்தது. அதுவும் டெலிகிராமில் கசிந்த தகவல்களை வைத்தே கணித்திருந்தது. 

வெனிசுலாவைப் போலவே, சிரியாவை ஆளும் பஷர் அல் அசாத்துக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நல்லுறவு நிலவுகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தின் போது ரஷ்யா பெரிய அளவில் உதவியது நினைவுகூரத்தக்கது.

பஷர் அல் அசாத், புதின்

ஒருவேளை ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்கு புதின் விமானத்தில் பறந்தால், அவர் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் துருக்கி வான்வெளியைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதற்குத் துருக்கியிடம் அனுமதி பெற வேண்டும். துருக்கி அனுமதி கொடுக்கவில்லை என்றால், அது புதின் தப்பிக்கும் திட்டத்தைப் பேராபத்தில் ஆழ்த்தலாம்.

ஆனால் துருக்கியின் அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் எப்போது... என்ன முடிவு எடுப்பார் என்று கணிக்க முடியவில்லை என்பது தான் சிக்கல். துருக்கி நேட்டோவிலும் இருக்கிறது, அதே நேரத்தில் ரஷ்யா உடன் நட்பும் பாராட்டி வருகிறது. சில விஷயங்களில் துருக்கியும், ரஷ்யாவும் முரண்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

இரான்

ஒருவேளை சிரியா திட்டம் செயல்படுத்த முடியவில்லை என்றால், புதின் இரான் நாட்டுக்குத் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக டெய்லி மெயில் கூறுகிறது. இரான் ஒரு நேட்டோ உறுப்பினர் நாடும் அல்ல, மேற்கத்திய நாடுகளோடு நெருங்கிப் பழகும் நாடும் அல்ல என்பதால், இரான் ஒரு நல்ல தேர்வாக அமையலாம் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய உளவுத் துறை, துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகளோடு பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில் ரஷ்யா தோற்று விளாடிமிர் புதின் தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால் தான் இது உண்மையா அல்லது வெறும் வதந்திகளா என்பது தெரியவரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?