ஈஃபிள் டவரை புகைப்பட வல்லுநர்கள் இரவில் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருகிறது.
பாரீஸில் அமைந்துள்ள ஈஃபில் டவர், மிக முக்கியமான காதல் சின்னங்களில் ஒன்று. உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கோபுரத்தை காண வருவர். மேலும் வித விதமான கோணங்களில், வெவ்வேறு விதமான லைட்டிங்கில் இரவு நேரங்களில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈஃபிள் டவர் புகைப்படங்கள் பஞ்சமின்றி கிடைக்கும்.
பகல் நேரங்களில் யார் வேண்டுமானாலும் இதனை ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம். அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம்.
ஆனால், இந்த ஈஃபிள் டவரை இரவில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் உரிய அனுமதி வாங்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்... இரவு நேரங்களில் ஈஃபிள் டவரை Professional புகைப்பட வல்லுநர்கள் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என toureiffel.paris கூறுகிறது.
இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது. ஈஃபிள் டவரின் லைட்டிங்க் மற்றும் ஒளிரும் விளக்குகள் பதிப்புரிமையால் ( CopyRight) பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் புகைப்பட வல்லுநர்கள், முன்கூட்டியே உரிய அனுமதி பெற்று அதற்கென ஒரு கட்டணத்தையும் கட்டவேண்டுமாம்.
ஈஃபிள் டவர் மேலாண்மை நிறுவனத்தை தொடர்புகொண்டு நிபந்தனைகள் குறித்து தெரிந்துகொண்டு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று toureiffel.paris வலைத்தளம் கூறுகிறது.
ஈஃபிள் டவரை கட்டிய குஸ்டாவ் ஈபிள், 1923 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பதிப்புரிமை வைத்திருந்தார்.
1985 ஆம் ஆண்டில் பியர் பிடோவால் நிறுவப்பட்ட 20,000 விளக்குகளால் இந்த கோபுரம் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் காட்சி அளிக்கும்...
சராசரி சுற்றுலாப் பயணி கேமராவில் புகைப்படம் எடுக்க எந்த தடையும் இல்லை. புகைப்பட வல்லுநர்களுக்கு தான் இந்த நிபந்தனை
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust