காணமல் போன வளர்ப்பு நாய் - 160 கி.மீ. பயணித்து வீடு திரும்பியது எப்படி?  ட்விட்டர்
உலகம்

காணாமல் போன வளர்ப்பு நாய் - 160 கி.மீ. பயணித்து வீடு திரும்பியது எப்படி?

Keerthanaa R

காலை உரிமையாளருடன் வாக்கிங் சென்றபோது வழிமாறிப் போன நாய் ஒன்று, 160 கி மீ தூரம் பயணித்து கால் டாக்சி பிடித்து வீட்டை அடைந்துள்ளது

மக்களோடு மக்களாக வெகு தூரம் பயணம் மேற்கொள்ளும் நாய் பூனைகள் குறித்த கதைகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில், மூன்று வயதே ஆன நாய் ஒன்று, வழித்தவறி தொலைந்து போய், மீண்டும் தானே வீட்டிற்கு வந்து சேர்ந்த கதை இணையத்தை கவர்ந்து வருகிறது

ரால்ஃப் என்ற அந்த நாய்க்குட்டி வழக்கமாக தனது உரிமையாளர் ஜார்ஜுடன் மார்னிங் வாக் செல்லும். ரால்ஃபுக்கு வயது மூன்று.

அப்படி கடந்த திங்களன்று வாக்கிங் சென்றபோது தனது நண்பருடன் பேச ஓரிடத்தில் நின்றார் ஜார்ஜ். அப்போது ரால்ஃப் காணாமல் போனது.

உரிமையாளர் ஜார்ஜும் தனது வளர்ப்பு நாயை ஒரு பக்கம் தேட, ரால்ஃபும் வீட்டிற்கு செல்லும் வழியை தேடியுள்ளது. ஜார்ஜ் தன் வளர்ப்பு நாய் காணாமல் போனதாக போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தியிருந்தார்

வழி மறந்த நாய்க்குட்டி, மான்செஸ்டர் போகும் ஒரு கால் டாக்சியில் ஏறியுள்ளது. டாக்சியில் வந்த பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் தான் ஓட்டுநர் அந்த நாயை கவனித்திருக்கிறார்

அப்போது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநரின் நண்பர், ஜார்ஜ் வெளியிட்டிருந்த விளம்பரத்தை ஓட்டுநரிடம் பகிர்ந்தார். அதனை வைத்து அந்த ஓட்டுநர் நாயை அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தார்.

தனது நாயின் கழுத்து டேகில், ஜிபிஎஸ் டிராக்கரை பொறுத்தவுள்ளதாக ஜார்ஜ் தற்போது தெரிவித்திருக்கிறார்

காணாமல் போன ரால்ஃப், கிட்ட தட்ட 160 கி மீ தூரம் பயணித்து தன் வீட்டை அடைந்துள்ளது. இந்த கதை பலரையும் நெகிழ்ச் செய்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?