Elon Musk, Among The World's Richest, Lives In This 3-bedroom House
Elon Musk, Among The World's Richest, Lives In This 3-bedroom House Twitter
உலகம்

Elon Musk : உலக பணக்காரர் வாழும் சிறிய 3BHK வீடு - ஏன் இதை தேர்வு செய்தார்?

Priyadharshini R

பில்லியனர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் டெக்சாஸில் குடிபுகுந்துள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான எலான் மஸ்க், £138 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டிருந்தாலும், தோராயமாக 40,000 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் 40,88,250 ) மதிப்புள்ள ஒரு சிறிய மூன்று படுக்கையறை வீட்டில் ஏன் வசிக்கத் தேர்வு செய்தார்?

51 வயதான அவர் டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள சிறிய வீட்டை தனது நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் இருந்து வாடகைக்கு எடுத்துள்ளார். இது நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து 30 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளது.

அவர் தற்போது வசிக்கும் சிறிய பிளாட்-பேக் ஹவுஸின் பெயர் Casita. இது லாஸ் வேகாஸை தளமாகக் கொண்ட Boxabl என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்பு அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில்,

"ஒரு பில்லியனரின் வாழ்க்கை முறையை அனுபவிப்பதை தவிர்த்து தனது உடைமைகள் அனைத்தையும் விற்க நேர்ந்தாலும் ஒரே ஒரு வீடு மட்டுமே எனக்கு சொந்தமாக இருக்கும்" என்று மஸ்க் குறிப்பிட்டிருந்தது நினைவுகூறதக்கது.

Boxabl இன் வலைத்தளத்தில் இந்த சிறிய வீட்டில் என்ன வசதிகள் உள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது.

பெரிய குளிர்சாதனப்பெட்டி, மைக்ரோவேவ், பாத்திரங்கழுவி மற்றும் ஸ்டைலான ஷேக்கர் கேபினெட்ரியுடன் கூடிய சமையலறை உட்பட சில ஈர்க்கக்கூடிய அம்சங்களை வழங்குகிறது.

குளியலறையில் குளிப்பதற்கு வசதியாக ஆழமான டப், சுற்றி கண்ணாடி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லிவ்விங் அறை 375 சதுர அடியுடன் கதவுகள் மற்றும் ஜன்னல்கள், வாஷர் அல்லது ட்ரையர் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறய வீடாக இருந்தாலும் எல்லா வசதிகளை கொண்டுள்ளது. வீடு மிகக் குறைந்த பயன்பாட்டு பில்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

தனிமையாக இருக்க பிடிக்கிறது என எலான் மஸ்க் இந்த வீட்டை அவர் தேர்வு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?