Elon Musk: "நீங்கள் அழிப்பதை விட அதிக ஹமாஸ் வீரர்களை உருவாக்குகிறீர்கள்" - எச்சரித்த மஸ்க்
Elon Musk: "நீங்கள் அழிப்பதை விட அதிக ஹமாஸ் வீரர்களை உருவாக்குகிறீர்கள்" - எச்சரித்த மஸ்க் Elon Musk / Twitter
உலகம்

Elon Musk: "நீங்கள் அழிப்பதை விட அதிக ஹமாஸ் வீரர்களை உருவாக்குகிறீர்கள்" - எச்சரித்த மஸ்க்

Antony Ajay R

சமீபத்தில் யூடியூப் பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்ட எலான் மஸ்கிடம் காசா பகுதியில் நடந்துவரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இப்போது நடந்து வரும் கசா போர் எப்படி முடிவுக்கு வரும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? மக்களுக்கு நீண்ட கால நோக்கில் குறைந்த பாதிப்பைத்தரும் வழி எதுவென்று நினைக்கிறீர்கள்? என அவரிடம் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேன் கேட்டார்.

இதற்கு எளிமையாக பதிலளித்துவிட முடியாது எனக் கூறிய எலான் மஸ்க், நீங்கள் அழிப்பதை விட அதிகமான ஹமாஸ் உறுப்பினர்களை உருவாக்கினால் அது நல்ல வழி இல்லை. யாரோ ஒருவரின் குழந்தையைக் கொல்வதன் மூலம் நீங்கள் கணிசமான ஹமாஸ் உறுப்பினர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

"இதுபோன்ற ஒன்றை செய்யவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து வருவார்கள்"
எலான் மஸ்க்

மேலும் மஸ்க், இஸ்ரேலின் அதிகபட்ச கொடூரமான எதிர்வினையை தூண்டுவதுதான் ஹமாஸின் லட்சியம் என்றும், இஸ்ரேல் வெளிப்படையாக கருணையான விஷயங்களை செய்வதுதான் அவர்களுக்கு எதிரான சரியான செயல்பாடாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

'இது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தில் காட்டு' எனக் கூறுவதைப்போல இருந்தாலும் இதுதான் தீர்வு என்கிறார் எலான் மஸ்க்.

"இதுபோன்ற ஒன்றை செய்யவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து வருவார்கள்" என்கிறார் மஸ்க்.

மேலும் இஸ்ரேல் கசா பகுதிக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பதை வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

மேலும் மஸ்க் இஸ்ரேல் இன்றும் "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற வாக்கியத்தைப் பின்படுத்துவதாக குற்றம் சாட்டும் மஸ்க், "நீங்கள் நேரடியாக ஒரு இனப்படுகொலையை செய்வீர்கள் என்றால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதியில் இஸ்ரேலை வெறுக்கும் பெரும்பான்மையினரை நீங்கள் உருவாக்குவீர்கள்" என்றும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் கசாவுக்கு ஆதரவாக பேசுவது இது முதன்முறையல்ல. கடந்த மாதம் கசா பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்ட போது தனது ஸ்டார்லின்க் நெட்வர்க் அங்குள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?