உலகின் எந்த மூலையில் பிறந்தவராக இருந்தாலும்,சொந்தமாக ஒரு வீட்டைக் காட்டுவது, மிஞ்சிப் போனால் ஒரு சொந்த கம்பெனியை உருவாக்குவது சராசரி மனிதர்களின் இலக்காக இருக்கும்.
ஆனால் எலான் மஸ்க்குக்கு இந்த இரண்டுமே போதவில்லை. தனக்கென அல்லது தன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கென தனியே ஒரு சொந்த நகரம் வேண்டும் என்கிறார் போலிருக்கிறது.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சகட்டு மேனிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்தப் பணக்காரர், ஏன் இப்படி வெறி பிடித்தது போல நிலங்களை வாங்குகிறார் என்றால், அவர் தனக்கென சொந்தமாக ஒரு நகரத்தையே உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் வாழ்வதற்கும், வேலை பார்ப்பதற்கும் இந்த நிலங்களைப் பயன்படுத்த இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியீட்டுள்ளதாக சில வலைதளங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
எலான் மஸ்கின் நிறுவனம், டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினுக்கு அருகில் சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும், அதற்கு ஸ்னேயில் ப்ரூக் (Snailbrook) என பெயர் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர், இப்போதும் நிறுவன தரப்பிலிருந்து செய்து கொடுத்து வருகின்றனர். அப்படி எலான் மஸ்க், தன் ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதை ஊக்குவிக்க, தங்களுக்கென தனி நகரத்தை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில், ஜாம்ஷெட்பூர் என்கிற நகரத்தைக் குறித்து பத்திரிக்கைகளிலோ, செய்திகளிளோ படித்திருப்பீர்கள் அல்லது கேட்டிருப்பீர்கள். அந்த நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது அல்லது தன்னுடைய தொழில் தேவைக்காக, அந்த நகரத்தை மேலாண்மை செய்கிறது என்றால் அது மிகையல்ல.
அதே போல, ராய் பகதூர் குஜர் மால் மோடி என்பவர், மோடி தொழில் குழுமத்தை நிறுவினார். அவர், கடந்த 1933 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோதி நகர் என்கிற நகரத்தை நிறுவினார் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.
அவ்வளவு ஏன்..? ஆரக்கிள் நிறுவனத் தலைவர் ஒருவர் கூட, அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு முழு தீவை விலைக்கு வாங்கி தன் இஷ்டத்துக்கு மாற்றங்ககளைச் செய்து சொகுசு வாழ்கையை நடத்துவதாகச் செய்திகள் வெளியானதும், அவருக்கு எதிராக அந்தத் தீவைச் சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வாக்கிலேயே, டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தையும், தான் வசிக்கும் வீட்டையும் மாற்ற இருப்பதாகக் கூறினார். கலிபோர்னியா மாகாணத்தை விட்டு, தான் வெளியேற இருப்பதாக எலான் மஸ்க் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
சமீபத்தில், டெஸ்லா நிறுவனம் ஒரு மாபெரும் தொழிற்சாலையை டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில் கட்டியதும் இங்கு சுட்டுதலுக்குரியது. ஆஸ்டின் நகரத்துக்கு அருகில் இருக்கும் பாஸ்ட்ரோப் (Bastrop) கவுன்டி பகுதியிலும் எலான் மஸ்க்குக்கு அல்லது அவரது நிறுவனத்துக்குச் சொந்தமாக சுமார் 11 பெரிய நிலபுல பகுதிகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust