Errol musk Twitter
உலகம்

எலான் மஸ்க் தந்தை : 70 வயதில் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட எரால் மஸ்க்

திட்டமிட்டு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், சுமார் 41 வயது வித்தியாசம் காரணமாக தற்போது ஜனாவோடு தான் வாழ்வதில்லை என்றும் கூறியுள்ளார் எரால் மஸ்க்.

Gautham

மனித இனம், தன்னை பெருக்கிக் கொள்வதில் வெற்றிகண்டதால் தான் நாம் இன்று பூமியில் பரவிக் கிடக்கிறோம். ஆனால் இனப்பெருக்கம் மட்டுமே மனித இனத்தின் மகத்தான பணியல்ல. அதை நாம் கடந்த சில தசாப்தங்களில் பெரிய அளவில் கடந்துவிட்டோம்.

எரால் மஸ்க்

ஆனால் இங்கு ஒரு பிரபல தொழிலதிபரின் தந்தை, தன் தள்ளாத வயதிலும், தன் மகள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அவர் பெயர் எரால் மஸ்க், உலகின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி எலான் மஸ்கின் தந்தை.

Errol musk

ஒரு தந்தை எப்படி தன்னுடைய மகளோடு உறவு கொள்ள முடியும், குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் எனக் கோபப்படுவதற்கு முன் எரால் மஸ்கின் திருமண வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.

தென்னாப்பிரிக்காவில் பொறியாளராக இருந்த எரால் மஸ்க் 1970களின் தொடக்கத்தில் மே மஸ்க் என்கிற மாடலைத் திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் தான் எலான் மஸ்க், கிம்பல் மஸ்க், டோஸ்கா மஸ்க்.

1979ஆம் ஆண்டு ஹெய்டெ பெசிடென்ஹாட் (Heide Bezuidenhout) என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பே, ஹெய்டேவுக்கு ஜனா பெசிடென்ஹாட் என்கிற 4 வயது குழந்தை இருந்தது. ஜனா எரால் மஸ்க் பெற்றெடுக்காத மகள், ஆனால் ஹெய்டேவின் மகள் என்பதால் அவர் வளர்ப்பு மகளாகிறார் (Step Daughter).

Errol musk

ஜனா பெசிடென்ஹாட்

கடந்த 2017ஆம் ஆண்டு, தன் 70 வயதுகளில் இருந்த எரால் மஸ்க், தன் வளர்ப்பு மகளான ஜனா பெசிடென்ஹாட் மூலம், எலியட் ரஷ் என்கிற மகனைப் பெற்றெடுத்தார். அவருக்கு தற்போது சுமார் ஐந்து வயது இருக்கலாம்.

எரால் மஸ்க் தன்னுடைய 70களில் இருந்து கொண்டு, தன் வளர்ப்பு மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது, அப்போதே ஒட்டுமொத்த குடும்பத்திலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் மிகவும் கடிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதெல்லாம் ஒருவாறு அடங்கி இருந்த நிலையில் மீண்டும் மஸ்க் குடும்பத்தில் எரால் மஸ்க் ஒரு குண்டை வீசினார்.

Errol musk

சமீபத்தில் 'சன்' என்கிற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், தன் 35 வயது (ஜனா பெசிடென்ஹாட்) வளர்ப்பு மகளோடான உறவில், 2019ஆம் ஆண்டு தனக்கு மற்றொரு குழந்தை பிறந்ததாகக் கூறினார்.

திட்டமிட்டு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், சுமார் 41 வயது வித்தியாசம் காரணமாக தற்போது ஜனாவோடு தான் வாழ்வதில்லை என்றும் கூறியுள்ளார் எரால் மஸ்க்.

என் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை. எனக்கும் ஜனாவுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்ததை அவர்கள் இப்போதும் விரும்பத்தகாத ஒன்றாகவே பார்க்கிறார்கள். காரணம் ஜனா பெசிடென்ஹாட் அவர்களுடைய சகோதரி அல்லது ஒன்றுவிட்ட சகோதரி என ஊடகங்களிடம் கூறியுள்ளார் எரால் மஸ்க்.

என்னால் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றால் நான் நிச்சயம் பெற்றுக் கொள்வேன். பெற்றுக் கொள்ளாமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் நான் பார்க்கவில்லை என எரால் மஸ்க் கூறியதாகச் சில தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?