ஆணுறையை வைத்து மழையிலிருந்து மைக்கை காத்த ரிப்போர்டர்- ரூம் போட்டு யோசிப்பாங்களோ... Twitter
உலகம்

ஆணுறையை வைத்து மழையிலிருந்து மைக்கை காத்த ரிப்போர்டர்- ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

Antony Ajay R

அமெரிக்காவின் ஃப்ளோரிடா, கலிபோர்னியா உள்ளிட்ட மாகணங்களை இயன் சூறாவளி ( Hurricane Ian ) தாக்கி வருகிறது. நேற்று புளோரிடாவை இந்த சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் கார்கள் சேதமடைந்தன.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதுடன் முன்னெப்போதும் இல்லாத அளவு சூறாவளி வலுவடைந்து வருகிறது என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

புயல் பாதித்த பகுதிகளிலிருந்து தொடர்ந்து செய்திகளை வழங்குவதற்காக பல சர்வதேச ஊடகங்கள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் களத்திலிருந்து செய்திகளை வழங்கிவந்த என்.பி.சி செய்தியாளர் கைலா காலர் (Kyla Galer) செய்த செயல் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

கைலா புயல் பாதித்த பகுதியிலிருந்த மக்களுடன் உரையாடி செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். அப்போதும் கன மழை பெய்துகொண்டிருந்தது. தண்ணீரில் மைக் சேதமாகாமல் இருக்க கைலா ஆணுறையைப் பயன்படுத்தி அதனை மூடியிருந்தார்.

கைலாவின் இந்த ஐடியா இணையவாசிகளை ஈர்த்தது,

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் மைக்கில் வித்தியாசமாக இருப்பது என்னவென்று கேட்க, "அது சாதாரண ஆணுறை தான். மைக் மழை நீரால் சேதாரம் ஆக வாய்ப்பிருக்கிறது" என்று பதிலளித்துள்ளார் கைலா.

நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெள்ளம் எத்தனை மோசமாக பாதித்திருக்கிறது என்பதை காட்டும் விதமான வீடியோ ஒன்றை வெளியிட்டார் கைலா. மக்கள் விழித்திருக்கவும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மக்களுக்காக உலக மக்களின் பிரார்த்தனைகளையும் வேண்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?