Ukraine Twitter
உலகம்

உக்ரைனிய பெண்களை வன்கொடுமை செய்த ரஷ்ய வீரர்கள் - பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

Priyadharshini R

போர் நடத்தும் பேரில் ரஷிய வீரர்கள் உக்ரைன் பெண்களை வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த ரஷ்ய ராணுவம் சமீபத்தில் பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் யுக்தியைக் கையில் எடுத்துள்ளது.

உக்ரைனிய பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகள் முன்பே அவர்களது தாயைக் கத்தி, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி இவர்களின் ஆசைக்கு இணங்க வைப்பது எனத் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.

Ukraine

உக்ரைனிய பெண்கள் மீது ரஷ்ய வீரர்கள் நடத்திவரும் வன்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத உலக நாடுகள், ரஷ்யாவை எச்சரித்து வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறித்து ரஷ்ய ராணுவ வீரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்தது.

ஆனால் உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ரஷ்யப் படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இறந்து கிடந்த உடல்களை மீட்டு தற்போது பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷ்ய வீரர்கள், உக்ரைனிய பெண்களுக்கு எதிராகச் செய்த வன்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தவகையில் பெண்களைக் கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?