சூட்கேஸுக்குள் மனித உடல்கள் - அதிர்ந்த குடும்பத்தினர் Twitter
உலகம்

சூட்கேஸுக்குள் மனித உடல்கள்: அதிர்ந்த குடும்பத்தினர் - என்ன நடந்தது?

Keerthanaa R

நியூசிலாந்தில் ஏலத்தில் வென்ற சூட்கேஸுக்குள் மனித உடல்களைப் பார்த்த குடும்பம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

நியூசிலாந்தில் ஏலம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்குகொண்டிருந்த தெற்கு ஆக்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று அந்த ஏலத்தில் சூட்கேஸ்களை வென்றது. ஏலம் முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தனர்.

ஏலம்

அப்போது தான் அதற்குள் மனித உடல்கள் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களது வீட்டிற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கிடைத்த பிரேதங்களுக்கும் அந்த குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ள நிலையில், அந்த உடல்கள் யாருடையவை, இது கொலையா, எப்படி ஏலம் நடக்கும் இடத்தில் இந்த பெட்டி வந்தது என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

dead body

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் விரைவுப் படுத்தியுள்ளது நியூசிலாந்து போலீஸ்.

ஏலத்தில் அவர்கள் கூறப்போகும் பொருட்கள் என்ன என்பதை முன்கூட்டியே அறிய முடியாது என்ற நிபந்தனை இருந்ததால், இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். மேலும், வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க, அவர்களது வீட்டிற்கு செல்லும் வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?