Female Sex Workers Suffering in South Korea Twitter
உலகம்

தென்கொரியா : தவிக்கும் பெண் பாலியல் தொழிலாளர்கள்; கறார் காட்டும் அரசு - என்ன காரணம்?

இவ்வாறு அரசாங்கம் கறார் காட்டினாலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகவும், இரண்டு வருடங்களுக்கு மாதம் 1,000 டாலர்கள் வழங்குவதாகவும் கூறியிருக்கிறது. ஆனால் அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களோ..

Priyadharshini R

பல நாடுகளில் பாலியல் தொழில் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெற்றுகொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் உள்ளது தென் கொரியா நாடு.

கடந்த 2004ஆம் ஆண்டு தென் கொரியாவில் பாலியல் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மறைமுகமாக தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

சட்டத் தடைகள் மற்றும் காவல்துறை ஒடுக்குமுறைகள் இருந்தபோதிலும், தென் கொரியாவில் பாலியல் தொழில் தொடர்ந்து செழித்து வருகிறது. அதே நேரத்தில் பாலியல் தொழிலாளர்கள் அரசின் நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

தென் கொரிய அரசாங்கம் பாலியல் தொழில் நடக்கும் இடங்களை மூட நினைக்கிறது.

தென்கொரிய நாட்டு அதிபர் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், ”பாலியல் தொழிலுக்காக பெண்கள் இன்றும் கடத்தப்படுகிறார்கள். இதனை நிச்சயம் தடுத்து நிறுத்த போராடுவேன்” என்றார்.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, பாலியல் தொழில் நடக்கும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவியுள்ளது

தன்னார்வு நிறுவனம் ஒன்று வாரம் தோறும் அந்த பகுதிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வதே தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எண்ணுகிறார்கள்.

இதை எதிர்த்து அங்கிருக்கும் பெண் பாலியல் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

இவ்வாறு அரசாங்கம் கறார் காட்டினாலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகவும், இரண்டு வருடங்களுக்கு மாதம் 1,000 டாலர்கள் வழங்குவதாகவும் கூறியிருக்கிறது.

ஆனால் அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களோ, தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?