garlic canva
உலகம்

Garlic Popsicle : இணையத்தை கலக்கும் புதிய வகை ஐஸ் கிரீம்| வைரல் வீடியோ

Keerthanaa R

சமையலில் புதிதாக ஏதேனும் ஒரு டிஷை முயற்சி செய்வது, தற்போது அதிகரித்து வருகிறது. முக்கியமாக கொரோனா காலக்கட்டத்தில் அனைவருமே வீட்டில் சமைக்க துவங்கி விட்டதால், இந்த எக்ஸ்பெரிமென்ட்டிங் என்பது வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. மேகியில் மாஸா, சாண்ட்விச்சில் ஐஸ் கிரீம், பீட்சாவில் குலாப் ஜாமுன் என பரிசோதனைகளுக்கு எல்லை இல்லை.

அந்த லிஸ்ட்டில் இப்போது சேர்ந்திருக்கும் புதியதொரு விஷயம், பூண்டு ஐஸ். ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் அவர் ஒரு கொத்து பூண்டை எடுத்து ஒரு பேப்பர் கப்பில் போடுகிறார். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உறைய வைத்து, பின்னர் அதை குச்சி ஐஸ் போல கடித்து சாப்பிடுகிறார்.

இந்த வீடியோவை மேகா என்ற ஊட்டச்சத்து நிபுணர், தனது இன்ஸ்டாகிராமில் பகிர, படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

வீடியோவை பார்த்த இணையவாசிகளும் 'நரகத்தின் உணவு' (Food From Hell) என இதனை வர்ணித்து வருகின்றனர். பூண்டை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது கூட ஒப்புக்கொள்ள முடிகிறது, ஆனால், பூண்டை வைத்து ஐஸ் தயாரித்து யாரேனும் சாப்பிடுவார்களா என்பது தான் பலரது கேள்வி.

மற்றொரு தரப்பினரோ, பூண்டு சத்தான உணவு தான் என்றும், இதனை சாப்பிடுவதில் தவறு என்ன எனவும் கேட்டு வருகின்றனர்.

பூண்டு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளில் சில... வியர்வையை பெருக்கும், உடல் சக்தியை அதிகமாகும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமன் குறைக்க, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் பூண்டு உதவும். ஆனால், இதை ஐஸ் போல சாப்பிடுவது கடினம் தான்

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதையடுத்து, 12 மில்லியன் வியூக்களை பெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?