மெட்டா: சும்மா இருக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? Twitter
உலகம்

Meta : சும்மா இருக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்?

இதில் வேடிக்கை என்னவென்றால், செய்யாத வேலைக்கு மேடி உள்பட ஊழியர்கள், பல மீட்டிங்களை நடத்தியுள்ளனர். ஆனால், மேடி சில நாட்களிலேயே நிறுவனத்தால் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

Keerthanaa R

ஒரு வேலையும் செய்யாமல் இருக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கிய மெட்டா நிறுவன பெண் ஊழியர் ஒருவர், நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஸ்ட் கட்டிங் போன்ற சில காரணங்களுக்காக உலகின் பெறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஒரே மூச்சில் பணியாளர்களை லே ஆஃப் செய்து பேரதிர்ச்சிக்குள்ளாக்கின மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்கள்.

இவர்கள் லே ஆஃப் நடவடிக்கையை மேற்கொண்ட சமயத்தில், புதிய ஊழியர்களை இனி பணியமர்த்த மாட்டோம் என்ற நோக்குடன் தான் நிறுவனங்கள் செயல்பட்டன.

இந்த சமயத்தில் தான் மேடி என்ற பெண்ணும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்

Meta settles Cambridge Analytica scandal case for $725m

புதிய ஊழியர்களை பணியமர்த்தும் பதவி வகித்து வந்த மேடி, லே ஆஃப் சமயத்தில் வேலை எதுவும் செய்யாமல் இருக்க, அதாவது புதிய ஊழியர்களை பணியமர்த்தாமல் இருக்க ஓராண்டுக்கு அவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிலிருந்து சுமார் ஒரு வருடத்திற்கு அவரோ, அவரது அணியோ யாரையும் புதியதாக பணியமர்த்தக் கூடாது என்று நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.

இதனால், அந்த ஒரு ஆண்டில் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. இந்த ஒரு வருடம் முழுவதும் அவர் நிறுவனத்தை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் கற்றறிந்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், செய்யாத வேலைக்கு மேடி உள்பட ஊழியர்கள், பல மீட்டிங்களை நடத்தியுள்ளனர். ஆனால், மேடி சில நாட்களிலேயே நிறுவனத்தால் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

தனது நிறுவனத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும், இதனால் தனக்கு கிடைக்கும் லாபங்கள் குறித்தும் தன் டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மேடி.

இந்த வீடியோ வைரலானது. நிறுவனம் குறித்த தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதற்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வுகள் குறித்து மேடி சமூக வலைதளங்களில் பகிரவே, பலரும், லே ஆஃப் சமயத்தில் இதே போன்ற அனுபவத்தை தாங்களும் பெற்றதாக கூறினர்.

இது ஒரு புறம் இருக்க, மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பர்க் அடுத்தக்கட்டமாக 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதில் 5000 பணியிடங்களுக்கு ஆட்களை பணியமர்த்தப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?