ட்விட்டர் நிறுவனர் வெளியிட்ட Bluesky செயலி - எலான் மஸ்குக்கு ஆப்பா? Twitter
உலகம்

ட்விட்டர் நிறுவனர் வெளியிட்ட Bluesky செயலி - எலான் மஸ்குக்கு ஆப்பா?

Antony Ajay R

ட்விட்டர் நிறுவனரான ஜாக் டார்ஸி மீண்டும் ட்விட்டரில் இணைவது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த 2021 நவம்பரில் டார்ஸி ட்விட்டரின் சி.இ.ஓ பதவியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து மொத்தமாக வெளியேறினார்.

ஜாக் டார்ஸி இப்போது எலான் மஸ்கின் நேர் எதிர்போட்டியாளராக உருவாகியிருக்கிறார்.

அவர் புதிதாக ட்விட்டரைப் போலவே ப்ளூஸ்கை என்ற தளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சோதனை நிலையில் வெளியாகியிருக்கிறது ப்ளூ ஸ்கை.

பீட்டா வெர்ஷனாக வெளியாகியிருப்பதனால் அழைப்பு லின்க் இல்லாமல் இப்போது யாரும் ப்ளூ ஸ்கையில் இணைய முடியாது.

விரைவில் இந்த சமூக வலைத்தளம் அனைவருக்காகவும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் சோதனையில் இருக்கும் ப்ளூஸ்கை, 2000த்துக்கும் மேலானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரைப் போலவே, புளூஸ்கை பயனர்களும் கணக்குகளைத் தடுக்கலாம், பகிரலாம் மற்றும் முடக்கலாம். இருப்பினும், லிஸ்ட் ஆப்ஷன் இன்னும் இல்லை.

இது தவிர, பயனர்கள் "யாரைப் பின்தொடர வேண்டும்" பரிந்துரைகளைப் (Suggestions) பெறுவார்கள். ட்விட்டரைப் போலவே விருப்பங்கள், மறுபதிவுகள், பின்தொடர்தல் மற்றும் பதில்கள் உள்ளிட்ட உங்களின் அறிவிப்புகளைச் சரிபார்க்க மற்றொரு டேப் உதவுகிறது. தனி மெஸேஜ் ஆப்ஷன் எதுவும் இல்லை என்று சில அறிக்கைகள் கூறுகிறது.

ட்விட்டரிலேயே இருக்கலாமா? அல்லது ப்ளூஸ்கைக்கு மாறலாமா என நெட்டிசன்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

எலான் மஸ்க் ட்விட்டரில் செய்யும் சேட்டைகளுக்கும் ஒரு முடிவு கிடைத்தபடி இருக்கும் என்பது பலரின் கருத்து.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?