Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு Twitter
உலகம்

Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

புலாவ் சோறும், பிரியாணியும் அடிப்படையில் இரு வேறு சுவை கொண்டவை. பிரியாணி ஈரானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது. பிரியாணியின் மூல வார்த்தையான பிரிஞ் பிரியாண் என்பது பெர்சிய மொழியில்தான் இருக்கிறது. இதன் பொருள் வறுத்த சோறு.

Govind

குழலையும் யாழையும் இனிது என்று சொல்பவர்கள் மழலையின் சொல் கேளாதவர்கள் என்பார் திருவள்ளுவர். அதே போன்று மற்ற உணவு வகைகளை சிறந்தது என்பவர்கள் பிரியாணியை சுவைத்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரியாணி இந்தியாவின் தேசிய உணவாகி விட்டது.

முன்பெல்லாம் திருமணம், விருந்து நிகழ்வுகளின் உணவாக இருந்த பிரியாணி இன்று சிலருக்கு அன்றாட உணவாகி விட்டது. வாரம் ஒரு முறை பிரியாணி உண்ணாதார் அரிது என்றும் சொல்லலாம்.

Hyderabad

400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் மக்கள் மனதில் ஹைதராபாத் பிரியாணி என்பதாக இணைந்துள்ளது. ஹைதராபாத் என்றால் சார்மினார் நினைவுச்சின்னம் நினைவுக்கு வருவதை விட பிரியாணி கண்டிப்பாக நினைவுக்கு வரும்.

இன்று பிரியாணி நமது உள்ளூர் உணவாக மாறியிருக்கலாம். ஆனால் அது இந்தியாவிற்கு எங்கிருந்து எப்போது வந்தது என்பது பலரும் கேட்க விரும்பும் ஒரு கேள்வி.

சில சோம்பேறி அறிஞர்கள் உடனே ஒரு கருத்தை தெரிவிக்கிறார்கள். அதாவது மத்திய ஆசியாவின் புலாவ் சோறுதான் வண்ணமயமான பிரியாணியாக இந்திய மக்களால் மாற்றப்பட்டிருக்கிறதாம். ஆனால் இந்த கருத்து உண்மையல்ல.

புலாவ் சோறும், பிரியாணியும் அடிப்படையில் இரு வேறு சுவை கொண்டவை. பிரியாணி ஈரானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது. பிரியாணியின் மூல வார்த்தையான பிரிஞ் பிரியாண் என்பது பெர்சிய மொழியில்தான் இருக்கிறது. இதன் பொருள் வறுத்த சோறு.

Iran Biryani

இரானில் நம்மூரில் தம் பிரியாணி என்று சொல்வது போல சமைக்கிறார்கள். பானையை மூடியின் மீது வைக்கிறார்கள். அதன் மூலம் வேக வைத்தல் நிதானமாக நடக்கிறது. இறைச்சியின் சாறுகளிலிருந்து இறைச்சி தானே வேகிறது. மேலும் அரிசி மற்றும் நறுமண மசாலாப் பொருட்களின் அடுக்குகளுடன் பிரியாணி தயாராகிறது.

தற்கால ஈரானில் விற்கப்படும் பிரியாணியில் அரிசி இல்லை. காகிதத்தை விட மெல்லியதாக இருக்கும் ருமாலி ரொட்டியின் மேலே வேகவைக்கப்பட்ட இறைச்சியை வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

ஆனால் பிரியாணி எனும் இந்த உணவு வகை இந்தியாவிலும் பரிணமித்துள்ளது. இங்கு இதன் வரலாறு வண்ணமயமானது.

பிரியாணி மொகலாயர்களுடன்தான் இந்தியாவிற்கு வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது வளைகுடாவிற்கு சென்ற புனித பயணிகள் மற்றும் வீரர்கள், அரசு அதிகாரிகள் மூலம் தென்னிந்தியாவின் தக்காண பீடபூமிக்கு வந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதற்கு வெகு காலம் கழித்துதான் பிரியாணி சாலை மற்றும் கடல் மார்க்கமாக இந்திய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து அந்தந்த வட்டாரங்களின் உணவுப் பழக்கத்திற்கேற்ப பிராந்திய வடிவம் எடுத்தது.

Biryani

கேரளாவிற்குச் சென்றால் அங்கே மலபார் - மாப்ளா பிரியாணி பிரபலமானது. ஒரு காலத்தில் மீனும் இறாலும் இருந்த பிரியாணியில் கோழிக்கறியும், இறைச்சியும் இருக்கின்றன. இங்கே மசாலா அதிகம் இருக்கும். ஹைதராபாத் பிரியாணியில் இருக்கும் ஒரு ஒத்திசைவு இங்கேயும் இருக்கும்.

கேரளாவில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிறது மேற்கு வங்கம். இங்கே வங்கதேசத்தின் தலைநகரம் டாக்காவின் பாணியில் இருக்கும் பிரியாணியை சுவைக்கலாம். இதில் மசாலா குறைவு. இந்த துறைமுக நகரத்திற்கு பிரியாணி கடல் மார்க்கமாக வந்திருக்கலாம். இந்தப் பிராந்தியத்தை ஆங்கிலேயருக்கு முன்பு நவாப் வம்ச அரசர்கள் ஆண்டார்கள்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் பிரியாணி ருசியுடன் சமைக்கப்படுகிறது. அங்கு ஒரு காலத்தில் வந்த துரானி ஆப்கானியர்களோடு திரிபடைந்த பிரியாணியும் வந்திருக்கலாம்.

வடக்கு உத்திரப்பிரதேசத்தின் மொரதாபாத் பிரியாணியும் தலைநகர் தில்லியில் பிரபலம். ராஜஸ்தானில் பிரியாணி அந்த ஊரின் வாசனை பாணிக்கேற்ப மாறியுள்ளது. ஆஜ்மீர் சூஃபி தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு இந்த வகை பிரியாணியை வழங்குகிறார்கள்.

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கேயே எத்தனை வகை பிரியாணி உள்ளது. ஆம்பூர் பிரியாணி, செட்டி நாட்டு பிரியாணி, தலப்பா கட்டி பிரியாணி, மொகல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மூங்கில் பிரியாணி, தம் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி என்று விதவிதமான பெயர்களின் பார்க்கலாம். மேலும் கோழி, ஆடு, மாடு, மீன் என அனைத்து வகைகளுடன் இந்த பிரியாணியை நீங்கள் சுவைக்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு வட்டார பிரியாணியும் சுவையிலும் பரிணாம வளர்ச்சியிலும் வேறுபட்டிருந்தாலும் பிரியாணி என்றால் பிரியாணிதான். அதை அடித்துக் கொள்ள வேறு உணவு ஏதுமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?