Fu**king என்ற பெயரை மாற்றிய கிராமம் - புதிய பெயர் என்ன?
Fu**king என்ற பெயரை மாற்றிய கிராமம் - புதிய பெயர் என்ன? Twitter
உலகம்

ஆஸ்திரியா: Fu**king என்ற பெயரை மாற்றிய கிராமம் - புதிய பெயர் என்ன?

Antony Ajay R

ஒரு மனிதரானாலும் இடமானாலும் அதற்கு முக்கிய அடையாளமாக இருப்பது பெயர்தான். குடும்பம், கலாச்சாரம், ஆன்மிகம், வரலாறு, அரசியல் தொடர்பான பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும்.

இந்த பெயர் எனும் அடையாளத்தால் எதிர்நீச்சல் படத்தில் வரும் குஞ்சிதபாதம் சிவக்கார்த்திகேயன் போல பல ஆண்டுகளாக சங்கடப்பட்டு வந்தது ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஒரு கிராமம்.

ஃபக்கிங் (Fu**king) என்ற அந்த கிராமத்தின் பெயர் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவ, இப்போது பெயரையே மாற்றும் நிலைக்கு வந்துவிட்டது அந்த கிராமம்.

ஃபங்கிங் (Fugging) என்பது அந்த கிராமத்தின் புதியப் பெயர். 2021ம் ஆண்டு இந்த பெயர் மாற்றும் முடிவை அந்த கிராமம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னவில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பங்கிங் கிராமம். ஆஸ்திரியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் இந்த கிராமத்தை கேலி செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக ஆங்கில பேசும் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா இன்ஃப்ளூயன்சர்கள் இந்த ஊரின் பெயர் பலகையின் முன் நின்று புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து பரப்பத் தொடங்கினர். இது அங்கு வாழும் மக்களின் மனநிலையை மோசமாக்கியது.

Fu**king என்பது ஆங்கில கெட்டவார்த்தை என்பதை நாம் அறிவோம். அந்த வார்த்தையைக் குறிப்பிட்டே இந்த ஊரின் மக்களை அழைக்கத் தொடங்கியது இந்த பிரச்னையைத் தீவிரமாக்கியது.

சமுக வலைத்தளங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறோம். இதனால் எதிர்மறை பாதிப்பை சந்தித்த இந்த கிராமம் தனது பெயரை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தது.

இந்த பெயர் மாற்றம் அந்த ஊர் மக்களுக்கு ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கலாம். சமுக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள் பிற ஊர்களைப் பற்றி குறிப்பிடும்போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?