Metrolink Train Collision Pexels
உலகம்

ரயில் விபத்தில் இறந்தவரிடம் இருந்து 35 பேருக்கு மர்ம ஃபோன் கால் - நடந்தது என்ன?

Keerthanaa R

நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்த பின்பும் நம்மை தொடர்புகொள்ள முயற்சிப்பார்கள் போன்ற விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி அவர்கள் நம்மிடம் பேச நினைக்கையில் ஏதாவது ஒரு மீடியம் மூலமாக நமக்கு செய்திகளை அனுப்புவார்கள் என்று படங்களிலும் கதைகளிலும் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இது நிஜமாகவே நமக்கு நடந்திருக்கிறதா என்று கேட்டால் நம்மில் பலர் இல்லை என்று தான் சொல்லுவோம்.

அப்படிபட்ட ஒரு அமானுஷ்ய சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. சார்லெஸ் ஈ பெக் என்ற நபர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அந்த ரயில் விபத்துக்குள்ளானதால் அவர் இறந்து விட்டார். ஆனால் அவர் இறந்த பின்பும் கூட அவரது தொலைப்பேசியிலிருந்து அவரது நண்பர்கள் உறவினர்கள் என கிட்ட தட்ட 35 பேருக்கு போன் கால் சென்றுள்ளது.

Mysterious Phone Calls

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நேர்காணலுக்காகச் சென்ற சார்லஸை அவரது காதலி ஆண்ட்ரியா மூர்பார்க் என்ற ரயில் நிலையத்தில் பிக் அப் செய்துகொள்வதாக இருந்தது. டெல்டா ஏர்லைன்ஸில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்து வந்த சார்லஸ், வேறு வேலைக்காகத் தேடிவந்த நிலையில், வான் நியூஸ் விமான நிலையத்தில் ஒரு வேகன்ஸி வரவே, அதற்கான நேர்காணலுக்காக தான் அவர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு புறப்பட்டார். அவரது சொந்த ஊரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸிற்கு விமானம் மூலம் சென்றபின்னர் அங்கிருந்து மூர்பார்கிற்கு மெட்ரோ மூலம் சென்றார் சார்லஸ்.

எதிர்பாராத விதமாக சார்லஸ் சென்ற மெட்ரோ ரயில் சாட்ஸ்வர்த் என்ற இடத்தை நெருங்கியபோது அதே தண்டவாளத்தில் எதிரே வந்த ரயிலுடன் மோத, அந்த விபத்தில் ரயிலில் பயணித்தவர்களில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 135 பேர் பலத்த காயமடைந்தனர். இது அமெரிக்காவின் மிக கோரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக மாறியது.

Metrolink Train Collision

இந்த விபத்தில் சார்லஸும் உயிரிழந்தார். ஆனால், அவரது காதலிக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ இந்த சம்பவம் சில மணி நேரங்கள் கழித்து தான் தெரியும். விபத்து நடந்து அவர்களுக்கு செய்து சென்றடையும் வரையில் சார்லஸிடமிருந்து அவர்களுக்குத் தொடர்ந்து ஃபோன் கால்கள் சென்றுள்ளது. அவர்களும் எடுத்து பேச முயர்ச்சித்தபோது, அந்த பக்கத்தில் அமைதி தான் நிலவியுள்ளது. திரும்ப அழைத்த போதும் நேரடியாக வாய்ஸ் மெசேஜ்ஜுக்கு சென்றுள்ளது.

சார்லஸின் தொலைப்பேசி எண்ணிலிருந்து கிட்ட தட்ட 12 மணி நேரத்திற்கு 35 பேருக்கு தொடர்ந்து கால்கள் சென்றுள்ளது. அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என பலரையும் தொடர்புகொள்ள முயற்சி நடந்துள்ளது.

Mysterious Phone Calls

விவரம் அறிந்த காதலி ஆண்ட்ரியா தொடர்ந்து ஃபோன் கால் வரவே, மீட்புக்குழு விரைவில் வந்து அவரை காப்பாற்றும் என்று அவருக்குத் தைரியம் சொல்லியுள்ளார். அவர் தொடர்புகொள்ள முயன்றவர்களும், சார்லஸ் இடிபாடுகளில் சிக்கி, உதவிக்காக தான் இவ்வளவு முறை கூப்பிடுகிறார் என நினைத்திருக்கின்றனர். விபத்து நடந்த பகுதியிலிருந்து மீட்புக்குழு சார்லஸின் உடலை கைபற்றி ஆராய்ந்ததில், சார்லஸ் அந்த விபத்தில் நிச்சயம் தப்பித்திருக்க இயலாது என்று தான் கூறுகின்றன. ஆனால் அவரது தொலைப்பேசியிலிருந்து எப்படி அத்தனை முறை அழைப்பு வந்ததென்று யாருக்கும் தெரியவில்லை.

Metrolink Train Collision

விபத்து ஏற்பட்ட இடத்தில் அவரது தொலைப்பேசி இல்லாததால் அதை ஹேக் செய்திருக்கக் கூடும் என்று ஒரு தரப்பு வாதம் இருக்க, அவர் அந்த ரயிலில் பயணிப்பது அவரது காதலி ஆண்ட்ரியாவுக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கூறப்படுகிறது. கிட்ட தட்ட 12 மணி நேரமாகப் பலருக்கும் சார்லஸிடம் இருந்து அழைப்புகள் வந்த பின்பு அதிகாலை 3 மணியோடு அது நின்றுள்ளது.


அவர் விபத்தில் உடனே இறந்திருந்தால் யார் அழைத்திருப்பார்கள் என்ற மர்மம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?