நீரின்றி மனிதன் இல்லை என்பது போல வாழ்நாள் முழுவதும் நமது ஒவ்வொரு செயல்களிலும் கலந்துள்ள தண்ணீர் ஒருவருக்கு எதிரியாக உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த அபிகாயில் பெக் என்ற 15 வயது சிறுமிக்கு கடந்த மாதம் அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோயின் அறிகுறிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் 13 வயதாகும் போது முதலில் தென்பட்டுள்ளது. அதாவது 200 மில்லியன் மக்களில் ஒருவரை தாக்கும் இந்த நோய்க்கான பாதிப்பில் ஒன்று தண்ணீர் அலர்ஜி.
மழை அல்லது தண்ணீர் மேலே பட்டாலே அமிலம் பட்டது போல தான் உணர்வதாக அபிகாயில் பெக் கூறியுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு கிளாஸ் தண்ணீர் கூட முழுதாக குடிக்க முடியாமல் தவிக்கும் அபிகாயில் மற்ற பானம் மாதுளை ஜூஸை பருகி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரது சொந்த கண்ணீரே தோலில் பட்டால் முகம் சிவந்து விடுமாம்.
இப்படி எல்லாம் நடக்குமா என மற்றவர்கள் கேலியாக கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்துள்ளார். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தண்ணீரில் உள்ள ஒரு பொருளின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம் என்று நம்பப்படும் நிலையில், தற்போது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளி உலகில் தனக்கிருக்கும் பாதிப்பு குறித்துத் தெரிவித்துள்ளதாக அபிகாயில் பெக் கூறியுள்ளார்.
இந்த நோயினால் ஏற்படும் தண்ணீர் ஒவ்வாமையால் இதுவரை 100க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp